Sunday, September 23, 2007

காவியக் கலைஞர் 84: ஒலி – ஒளிக் காவியம்

கடந்த செவ்வாய்கிழமை மாலை 6.30 மணிக்கு புனித ஜார்ஜ் மேனிலைப்பள்ளி வளாகத்தில் கலைஞரை பற்றிய ஒலி – ஒளிக் காவியம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. கலைஞர் அமர்ந்திருக்கும் முக்கிய மேடையை சுற்றி 25 மேடைகள், 500 கலைஞர்கள் என அற்புதமாக அறங்கேறியது நிகழ்ச்சி. மேடைகள் தரையில் மட்டும் அமைக்கப்படவில்லை, சில மேடைகள் கட்டிடத்தின் மூன்றாவது மாடியில், சில பால்கணியில் என வியக்கும்படி அரங்கம் அமைக்கப்ட்டிருந்தது அற்புதம். கலைஞர் பிறந்தது, பள்ளியில் சேர்ந்தது, மாணவர் பத்திரிக்கை தொடங்கியது, அண்ணாவின் நட்பு, பெரியாரின் அறிமுகம், தி.மு.க.வில் இணைந்தது, சிறை சென்றது என அனைத்து காட்சிகளுக்கும் திரைப்படங்களில் லொகேசன் மாறுவது போல் இங்கு விதவிதமான மேடைகளில் கண்டினியுட்டி மிஸ் ஆகாமல், டைமிங் டிலே ஆகாமல் அரங்கேற்றியது மிகவும் அற்புதம்.

நிகழ்ச்சி நிறைவடைந்தவுடன், வாழ்த்துரை வாழ்த்தவந்த தமிழ்ப் பேராளர் திரு.ச.ஜெகத்ரட்சகன், அடுக்கு மொழியில், அழகுத் தமிழில் அருவிபோல் பேசி அனைவரையும் மெய்மறந்து ரசிக்கவைத்தார். அவரை தொடர்ந்து வாழ்த்துரை வழங்கவந்த இயக்குனர் இமயம் திரு.பாரதிராஜா, கலைஞர் இருக்கும் மேடைகளில் தனக்கு எப்போதும் பேச்சே வராது என்று ஆரம்பித்து, காமராஜர்க்கு பிறகு தான் யாரையும் பக்தியோடு பார்த்ததில்லை என்றும் ஆனால் கலைஞரை கடந்த ஒன்னரை வருடமாக பக்தியோடு பார்க்க தொடங்கியிருப்பதாக சொல்லி கலைஞரை பாராட்டு மழையில் நனைத்து அமர்ந்தார். பிறகு தனது ஏற்புரையை தொடங்கிய கலைஞர்,
“.....அச்சத்தோடு பேசுகிறேன் என்று சொல்லி, எதையும் மிச்சம் வைக்காமலே விரிவுரையாற்றி அமர்ந்துள்ள அருமைதம்பி இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களே“ என ஆரம்பித்து தனது சிலேடைபேச்சால் பாரதிராஜவை நெளியவைத்தார். அவர் பேசியதில் இருந்து சில சுவாரஸ்யமான பகுதிகள் இங்கே

“தம்பி பாரதிராஜா இங்கே பேசும் போது, என்னை பார்த்தால் பேச்சுவர மறுக்கிறது என்று குறிப்பிட்டார். அவருக்கும் காவியங்களை படித்த அனுபவம் உண்டு. காட்சிகளை அமைத்த திறமை உண்டு. கலை வண்ணங்களை உருவாக்கிய வல்லமை உண்டு. எப்பொழுது பேச்சு வராது என்று உங்களுக்கு தெரியும். பேச்சுவராத நேரங்கள் இரண்டுதான். ஒன்று நீண்ட நாள் பிரிந்திருந்த காதலாகள் ஒன்று சேர்ந்தால், ஒருவரையொருவர் சந்திக்க நேர்ந்தால் பேச்சுவராது. சில நேரங்களில் தம்பி பாரதிராஜாவுக்கு பேச்சு வராததற்கு காரணம், நான் சொன்ன இந்த காரணமதான். ஆனால் அதையும் மீறி இன்றைக்கு பேச்சு வந்ததற்கு காரணம் நாங்கள் பிரிந்திருந்த நேரம் போய், ஒன்று கலந்த உள்ளத்தினனாக இந்த தமிழகத்தை வாழவைக்க வேண்டும், இந்த தமிழகத்தை வல்லமை கொண்ட ஒரு அரசாக அமைக்க வேண்டும், என்ற அந்த உணர்வில் ஒன்றுபட்டிருக்கின்ற காரணத்தால் அவருக்கு பேச்சு வந்திருக்கிறது (கைதட்டல்). வந்த பேச்சு இந்த மேடையோடு நின்று விடாமல், தொடர வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை (பலத்த கைதட்டல்)..............

தொகுப்பாளர் உமா குறிப்பிட்டதைப்போல் இந்த நிகழ்ச்சி யாரையும் நடுங்க வைக்கிற நிகழ்ச்சி அல்ல. அவரவர்களுக்கு நடுக்கம் ஏற்பட்டால், அதற்கு நிகழ்ச்சி நடத்திய யாரும் பொறுப்பல்ல. நடுக்கம் ஏற்படி வேண்டியவர்களுக்கு ஏற்படும் நடுக்கம் தொகுப்புரை வழங்குபவர்களுக்கு ஏற்படக்கூடாது, இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளா என்று கேட்கிறார்களே, எதிர்க்கிறார்களே, அவர்களுக்கு நடுக்கம் ஏற்படவேண்டும். அந்த நடுக்கத்தை உருவாக்குகின்ற வகையிலே இந்த நிகழ்ச்சி அமைந்திருக்கிறது. அவர்களும் நடுங்க தேவையில்லை ஏனென்றால் அவர்கள் எல்லாம் ரெருங்க வேண்டுமென்றுதான் நாம் விரும்புகிறோம். நடுங்கத்தேவையில்லை, நெருங்கி வாங்கள், நெருங்கி வந்தால்தான் நாங்கள் யாரென்று உங்களுக்கு தெரியும். நெருங்கி வந்த காரணத்தால்தான் நானும் பாரதிராஜாவும். பக்கத்து பக்கத்திலே அமர்ந்திருக்கிறோம் என்ற இந்த ஒரு உண்மையயாவது புரிந்துகொண்டு நீங்கள், இந்த உண்மைக்கு உருவகம் கொடுக்க வாருங்கள் என்று கேட்டு விடைபெறுகிறேன்” என்று தனது உரையாடலை நிறைவு செய்தார். கலைஞரின் பேச்சை கேட்டு சற்றே திக்குமுக்காடிப்போனார் பாரதிராஜா. கலைஞர், பாரதிராஜா உட்பட விழாவில் கலந்துகொண்ட பார்வையாளர்கள் அனைவரும் பாராட்டிய ஒருவர், இந்த ஒலி – ஒளி காவித்தை இயக்கி அரங்கேற்றிய வின்சென்ட் சின்னதுரை. ஆக

முத்தமிழறிஞர் - தமிழ்தலைவர் - சமூக நீதிக்காவலர்

மாண்புமிகு தமிழக முதல்வர்
டாக்டர் கலைஞர் அவர்களின்
வரலாற்றுப் பாதையை
21ம் நூற்றாண்டு தலைமுறையினருக்கு
அர்ப்பணிக்கும் - அரங்கேற்றம் தான்
இந்தகாவியக் கலைஞர் 84.

1 comment:

Varun Prasad said...

The coverage of the function is good. It is supposed to be done by Anantha Vikadan, some how they missed it.