Tuesday, September 25, 2007

நம் நாடு: சுயபுராணம்

Photo Courtesy: Cine Folks

சரத்குமார் தனிகட்சி தொடங்கியபின்னர் வெளியாகியுள்ள முதல் படம் நம் நாடு. அதிக சர்ச்சைகுள்ளாகி இப்போது சத்தமே இல்லாமல் வெளியாகியுள்ள படம். படம் முழுவதும் நடிகர் சரத்குமார் காட்டிலும் கட்சி தலைவர் சரத்குமாரரே அதிகம் வெளிப்படுகிறார்.

கல்வி அமைசசராக நாசர், அவருடைய மூத்த மாப்பிள்ளையாக சரண்ராஜ், இரண்டாவது மாப்பிள்ளையாக பொன்வண்ணன், மூன்றாவது மாப்பிள்ளையாக ரியாஸ்கான் , ஓரே மகனாக சரத்குமார். குடும்பத்தில் சரத்குமார் தவிர அனைவரும் ஊழல் பேர்வழிகள், நாட்டை சீரழித்துகொண்டிருக்கும் மனிதர்கள், அவர்களை எதிர்த்து தனி ஒரு ஆளாக போறடுகிறார் சரத்.

" என்ட்ரிகே இப்படி ஆடிப்போய்ட்டிங்க, அடுத்து அடுத்து அட்டாக் பண்ணா ஹார்ட் அட்டாக்கே வந்துரும் போல இருக்கே" என்கிற டயலாக்கோடு அறிமுகமாகிறார் சரத்குமார்.

நேர்மையை நிலைநாட்டி நாட்டை காக்க ஒரு கட்டத்தில் வில்லிவாக்கம் தொகுதியில் சுயட்சையாக நின்று தந்தையை எதிர்த்து வெற்றிப்பெறுகிறார் சரத்குமார். இரண்டு பெரிய கட்சிகளும் சம இடங்களில் வென்று இருக்க, சரத் யாருக்கு ஆதரவு அளிக்கிறாரோ அவரே ஆட்சி அமைக்க முடியும் என்கிற நிலையில், ஆதரவை தமிழக ஜனநாயக கட்சிக்கு அளித்து உள்துறை அமைச்சர் ஆகிறார் சரத். அமைச்சராக பொருப்பேற்றவுடன், அனைத்து ரவுடிகளையும் என்கவுன்டர்ரில் சுட்டுதள்ள உத்தரவு பிறப்பிகிறார், இன்கம்டாக்ஸ் ரெய்டு நடத்தி கருப்பு பணத்தை வெளிக் கொண்டு வருகிறார். கடைசியில் மக்கள் போற்றும் அரசியல்வாதி ஆகிறார் சரத்.

சரத்குமார் பற்றிய குறிப்புகளை கதையாக்கி, அவரது எதிர்கால அரசியல் கனவை திரைக்கதையாக்கி, ரசிகர்களின் பல்சை ஏகிறவைக்கும் வார்த்தைகளை வசனமாக்கி, கதைக்கு சற்றும் பொருந்தாத டைட்டில்லை தலைப்பாக வைத்து மூன்று மணி நேர சுயபுராணத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர் சுரேஷ்.

No comments: