Friday, October 05, 2007

ராமர் பட்டாபிஷேக விழா

ராமரை பத்தி கிண்டலாக கலைஞர் கேட்ட கேள்விகளும் அதை தொடர்ந்து எழுந்த சர்ச்சைகளும் நாம் அறிவோம். இது எந்த அளவுக்கு மக்களை அதிலும் குறிப்பாக ராம பக்தர்களை பாதித்தது என்று கேட்டால், சிறிதளவு கூட இல்லை என்று என்னால் நிச்சயம் சொல்லமுடியும். இதனால் ராமரின் புகழுக்கு பங்கம் வந்து விடுமா என்று கேட்டால், கலைஞர் பாணியில் சொல்லவேண்டும் என்றால், தினையளவு அல்ல திணையின் முனையளவு கூட பாதிப்பில்லை என்று தான் சொல்லவேண்டும். கீழே கடந்த மூன்று வாரமாக அரசியல்வாதிகள் விடுத்த அறிகைகளும் அதை தொடர்ந்து எங்கள் ஊரான நெற்குப்பையில் (Nerkuppai) நடந்த ஒரு நிகழ்ச்சியையும் சொல்ல விரும்புகிறேன்.

யார் ராமன்? எந்த பொறியியல் கல்லூரியிலே படித்து பொறியாளராக ஆனவன்? எப்போது அந்த பாலத்தை கட்டினான்?ஆதாரம் உண்டா? இல்லை
-- கலைஞர்

"கடவுளின் மறு அவதாரம் தான் ராமர்; கற்பனை கடவுள் அல்ல"
-- தேவகவுடா

உணர்வுபூர்வமாகவும், அதையும் தாண்டிய ஆன்ம தேடலின் முடிவாகவும் விளங்கும் ராம பக்தியையும், நம்பிக்கையையும் எப்பேர்ப்பட்ட சக்தியாலும் அசைக்க முடியாது. எனவே, ராமர் பாலத்தைத் தகர்க்காமலிருப்பதே அறிவுடைமை; பகுத்தறிவும் பட்டறிவும் கூட -- கல்கி

ராமர் பாலம் என்பது ஒரு நம்பிக்கைதானே தவிர அறிவியல் பூர்வமாக அதற்கு ஆதாரம் இல்லையென்று உலக ஆவணங்கள் சொல்கின்றன. வானவில்லைப் பலரும் ராமர்வில் என்று அழைக்கிறார்கள்; வானவில்லுக்கும் ராமருக்கும் எவ்வளவு உறவோ அவ்வளவு உறவுதான் பாலத்துக்கும் ராமருக்குமான உறவு.
--கவிஞர் வைரமுத்து

ராமர் பற்றி விமர்சனம் செய்த திமுக தலைவரின் தலையையும், நாக்கையும் துண்டிப்பவர்களுக்கு எடைக்கு எடை தங்கம் பரிசு வழங்கப்படும் -வேதாந்தி

காற்றுக்கூட-எங்கள் காவலை மீறி கலைஞரின் தோளில் கிடக்கும் துண்டின் நுனியைக் கூடத் தொடமுடியாது. --கவிஞர் மு.மேத்தா

இறைமறுப்பாளர்களும் சரி, இந்து மதத்தை மட்டுமே தங்களது தாக்குதல்களுக்கு இலக்காக்குவது அவர்களுடைய கொள்கைப் பிடிப்பில் காணப்படும் உறுதியின்மையின் வெளிப்பாடு என்றுதான் சொல்ல வேண்டும். --தினமணி தலையங்கம்

"கண்ணகி தன்னுடைய மார்பகத்தைக் கிள்ளி எறிந்து, மதுரையை எரித்ததாகச் சொல்கிறார்களே – அந்த டெக்னிக்கை, அவள் எந்தக் கல்லூரியில் படித்தாள்? அது என்ன பயாலஜியா? அல்லது வெடிகுண்டு தயாரிக்கிற கலையா?' என்று முதல்வர் கேட்பாரா? நாம் கேட்க மாட்டோம்; ஏனெனில் கண்ணகி காட்டியது, கற்பின் சக்தி என்பதை ஏற்பவர்கள் நாம். -- துக்ளக் தலையங்கம்

சேது சமுத்திர திட்டத்தில் 5 மாற்று திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. 6-வது திட்டம்தான் ராமர் பாலத்தை இடிக்கும் திட்டம். மற்ற 5 திட்டங்களை கைவிட்டு விட்டு பாலத்தை இடிக்கும் திட்டத்தை மட்டுமே கருணாநிதி வலியுறுத்தி வருகிறார். -- ஜெ

சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று கோரி திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் அக்டோபர் 1ம் தேதி நடத்தவுள்ள பந்த்தை தடை செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி வழக்கு

முழுஅடைப்பு அல்லது பந்துக்கு தடையில்லை என்று நீதிமன்றம் கூறிவிட்டது ! -- சென்னை ஐகோர்ட்டில்

Public right is superior to individual political party's right - Supreme Court
We cant tolerate these types of activities by political parties - Supreme Court

இதையடுத்து முழு அடைப்புக்கு பதிலாக சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் -- முதல்வர் கருணாநிதி

தமிழகத்தில் பஸ்கள் ஓடாததற்கும், தி.மு.க. நடத்தும் போராட்டத்துக்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த மத்திய அரசு தயங்கக் கூடாது என்றும் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

"“If this is the attitude of the DMK, the UPA government should not feel shy of dismissing it and imposing President's Rule"
"If there is no compliance with our order, it is complete breakdown of Constitutional machinery. We will then have to direct the government to impose President's rule"
- Supreme Court

புட்டபர்த்தி சாயிபாபா காலில் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் விழுந்து கும்பிட்ட-போதுகூட, வயதில் பெரியவர் என்பதால் அப்படிச் செய்தார் என்று காரணம் கொடுத்தார். பகுத்தறிவைப் பொறுத்தவரை, குடும்பத்துக்கு ஒரு அளவுகோல்; இதர உடன்-பிறப்புகளுக்கு இன்னொரு அளவுகோல் என்பதுதான் அவர் வழக்கம். -- ஞாநி

ஸ்டாலினும் தயாநிதி மாறனும் அம்மன் கோயிலில் கும்பிட்டுக் கற்பூர ஆரத்தியைத் தொட்டு வணங்கும்போது, கருணாநிதியின் பகுத்தறிவுக் கொள்கைப்-பிடிப்பு காணமல் போய்விடும். சால்வை-யின் மஞ்சள் நிறத்துக்கு விதவித-மான விளக்கங்கள் தருவாரே தவிர, மஞ்சள் நிறத்தை கைவிட மறுப்பது ஏன் என்பது பகுத்தறி-வுக்கு அப்பாற்பட்ட விஷயம். -- ஞாநி

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பினால் அரண்டுபோய் 11.30 மணிக்கு உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டு, அவசர அவசரமாக கோட்டைக்கு சென்று, அதிகாரிகள் மூலம் அவரே பந்தை முறியடிக்க உத்தரவு வழங்கினார். அவர் இருந்த இரண்டரை மணிநேரம் உண்ணாவிரதத்தில் அடங்குமா என்பது தெரியவில்லை. ஆனால், புறநானுற்று வீரம் புறமுதுகிட்டு ஓடியது என்பது மட்டும் உண்மை
--விஜயகாந்த்

உச்ச நீதி மன்றத் தீர்ப்பை மீறாத நிலையிலேயே ஏதோ
மீறி விட்டதாக கூறும் போது, நீதி மன்றக் கருத்துக் களைப்பற்றி
இப்போதல்ல, நான் எப்போதுமே கருத்து தெரிவிப்பதில்லை என்ற நிலையிலே உள்ளவன். அதனால் இப்போதும் நான் அந்த உச்ச நீதி மன்ற கருத்து பற்றி எதுவும் சொல்ல விரும்பவில்லை
. --கருணாநிதி பேட்டி

இப்படி தலைப்பு செய்தியை மூன்று வாரமாக தக்கவைத்துகொண்டிருக்கும் ராமர் விவகாரம், சற்றே மத்திய மாநில அரசை ஆட்டி பார்த்ததென்னவோ உண்மைதான். ஆனால் எவற்றையும் சற்றும் கண்டுகொள்ளாமல், எங்கள் ஊரில் சென்ற வாரத்தில் ராமாயணம் ஏடு படித்தல் 7 நாட்களாக தொடர்ந்து நடந்தது , 7வது நாளான சனிக்கிழமை ரமாராஜியததை நிறுவி ராமர் பட்டாபிஷேக விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. நடந்துகொண்டிருக்கும் எந்த சர்ச்சைக்கும் காது கொடுக்காமல் ஒருமித்த மனத்தோடு விழா நடைபெற்றது. நிற்பதற்கு கூட இடம் இல்லாத அளவிற்கு கூட்டம், வெளிநாட்டில் இருந்து வந்து கலந்துகொண்ட பக்தர்களை பார்க்கும் போது ராமராஜியம் உலகம் முழுவதும் பரவி இருக்கிறது என்பதை என்னால் மறுக்க இயலவில்லை. இந்த விழாவில் கலந்துகொள்வததின் மூலம் பெண்களுக்கு குழந்தை பேரு, திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம், போன்றவை தங்கு தடையின்றி நடக்கும் என்பது நம்பிக்கை. இந்த நம்பிக்கையின் நிருபணம்தான் வருடா வருடம் அதிகரிக்கும் பக்தர்கள் கூட்டம். ராமர் இருக்கிறாரா இல்லையா என்பதை காட்டிலும் மக்கள் நம்புகிறார்கள் என்பது முக்கியம். நம்பிக்கைத்தான் வாழ்க்கை, அந்த நம்பிக்கையை யார் நகைத்தாலும் அது கண்டனத்துக்கு உரியதே.

2 comments:

Boston Bala said...

நல்ல தொகுப்பு

Raja said...

Boston bala, வருகைக்கு நன்றி.