Friday, November 30, 2007

கமலஹாசனுக்கு கவியரங்கம்....

தீபாவளிக்கு முதல் நாள் கமலஹாசனுடைய பிறந்தநாளை முன்னிட்டு விஜய் T.Vயில் நடந்த கவியரங்கம்தான் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகளை காட்டிலும் அற்புதமான நிகழ்ச்சி. கவிஞர்கள் கபிலன், ந.முத்துக்குமார், மனுஷ்யபுத்திரன் , விவேகா பங்கேற்றனர். கவிஞர்கள் கவிதை வாசித்தனர் என்று சொல்வதை காட்டிலும், தங்கள் அழகுத் தமிழால் கமலின் திறமையை வர்ணித்தனர் என்றே சொல்லவேண்டும்.


ந.முத்துகுமாரின் கவிதை வரிகள்...


கமலஹாசனே கலைகளின் நேசனே,
ரத்தத்தில் சிலவகை A+ve, B+ve,O+ve ,
உனக்கு மட்டும்தான் C+ve..Cinema +ve ,
எல்லா நடிகர்களுக்கும் ரசிகர்கள் இருப்பார்கள்,
உனக்கு மட்டும் நடிகர்களும் ரசிகர்களாக,
நீ பூவாக நடித்தால் வேர்களை பார்த்தபின்தான் வாசனை காட்டுவாய்,
நீ தீயாக நடித்தால் வெந்து பார்த்தபின்தான் வாழ்ந்துகாட்டுவாய்,
உன் இதழ்கள் முத்த பெட்டகத்தை திறக்கும் சாவிகள், காதல் இளவரசன,எத்தனையோ நடிகர்கள் காதலித்தார்கள்,
நீ முத்தம் கொடுத்தபோதுதான் விழித்திரை வெள்ளிதிறையானது,

நீ குள்ளமாக நடித்தாய், தமிழ் சினிமா உயரமானது,
நீ கிழவனாக நடித்தாய், தமிழ் சினிமா இளமையனாது,

நீ ரூபாய் நோட்டில் கம்பி, பெண்கள் பிரிவில் M.P,

நீ ஒரு கடல், உனக்குள் முக்குளிக்கவரும் ரசிகனும்
முத்தாகவே மாறிவிடுகிறான்,
எல்லா கடலுக்கும் கரையிருக்கும்,
நீ கரையிலாத கடல்,
அதனால்தான் காலம் உனக்கு கொடுத்தது நரையிலாத உடல்.
நீ ஒரு மலை, நாயகனில் நீ அழுதாய் அழுகைக்கு இலக்கணம் பிறந்தது.
உலகம் முழுக்க விசாரித்து பார்தேன், உடல் தானம் செய்த முதல் நடிகன் நீதான்.
இன்றும் திரையாரங்குகளில் கலக்கபோவது யாரு?வேறு யாரு, நீ தான்.

நீ வாங்கிய விருதுகளை அடுக்கினால்
இமயமலை குள்ளமாகிவிடும்,
ஆழ்வார்பேட்டை ஆண்டவா,
ஆஸ்கார் விருது வாங்கிவா.

கபிலனின் கவிதை....


சினிமாவில் இழந்த சினிமாகாகரர் நீங்கள்,
அதனால்தான் வருமானவரி கட்டிக்கொண்டே

வாடகை வீட்டில் இருகிறீர்கள்.
நீங்கள் நடிகராக பணக்காரர்,
மனிதனாக ஏழை.
உயர்ந்தவர்கள் ஓய்வு நேரத்தில் ஊட்டிக்கு போவார்கள், உலகம் சுற்றுவார்கள்,
நீங்கள் ஓய்வு நேரத்தில் உள்ளூர் அறிகர்களை அழைத்து உரையடுவீர்கள்.
உங்களை குனிந்து பார்த்தால் குழந்தை நட்சத்திரம்,
அண்ணார்ந்து பார்த்தால் ஆகாய நட்சத்திரம்.

நீங்கள் கோவலனாக நடித்திருந்தால்
ஆயிரம் மாதவிகள் ஆசைபட்டிருபார்கள்,
இளங்கோவன் இரண்டாம் பாகம் எழுதியிருப்பான்.
சினிமா தாய்க்கு சிலை வைக்கவேண்டுமென்றால்,
ஓளவை ஷன்முகிதான் அடையாள பெண்.
உங்களுக்கு சப்பானியாகவும் நடிக்க தெரியும்
அம்பானியாகவும் நடிக்க தெரியும்.
எல்லா உருவங்களையும் செதுக்கிகொள்ளும்
அழகிய மெழுகு பொம்மை நீங்கள்.

விவேகாவின் கவிதை....


சிலர் வெளிநாடு போய் படம் எடுக்கிறார்கள்,
சிலர் வெளிநாட்டுப் படத்தையே எடுக்கிறார்கள்,
நீ வெளிநாடுகளோடு போட்டிபோடுகிற படம் எடுக்கிறாய்.
பிடிக்கிற சினிமாவையே எடுத்துகொண்டிருகாமல்,
பிறர் படிக்கிற சினிமாவை எடுக்கிறாய்.

எப்படி படம் பிடித்தாலும் அழகாய் தெரிகிற முகம் உனக்கு,
எப்படி படம் எடுத்தாலும் திருப்தியுறாத குணம் உனக்கு,
எப்படி விழுந்தாலும் எழுந்து நிற்கிற பலம் உனக்கு.
உனது புதுப் புதுப் 'வேடம்'தாங்களால்,
இந்த ஆழ்வார்பேட்படையே
கலைஞர்களின் வேடந்தாங்களாய் இருக்கிறது.
தலைக்கு மேல் சுற்றுகிற மின்விசிறியை கூட
ஒளி வட்டம்தான் என்று சொல்லி முக்காடு போட்டுகொள்வார்கள்,
ஆனால் பதக்கங்களின் போதைகளில் மயங்காமல்
புதிய பாதைகளில் புறப்படுகிறாய் நீ..
நிறை மாதம் ஆவதற்குள் பலமுறை வாந்தி எடுக்கும்
ஏழையின் வீட்டு உண்டியலை போல்,

உன் மருதநாயக கனவு நிறைவேறாமல் இருக்கிறது.
உன்னை புத்தகத்தில் இருந்தும் முத்தில் இருந்தும்
யாரும் பிரிக்க முடியாது,
நீ முத்த துணி துவைத்து பெண்களின் கண்ண மொட்டைமாடிகளில்
காயப்போடுகிற அழகை ஊரே ரசிக்கிறது.
இபோதெல்லாம் நீதி கேட்டால் கூட ஜாதி கேட்கிறார்கள்,
நீ பள்ளியில் பிள்ளையை சேர்கையில் ஜாதி கேட்டவனிடம் நீதி கேட்டாய்.
பட அதிபர்கள் சினிமா தயாரிக்கிறார்கள்,

சினிமா நம் நாட்டு முதல்வர்களையே தயாரிக்கிறது,
சினிமா பெட்டிகள் இங்கே வாக்கு பெட்டிகளின் தலைஎழுத்தை தீர்மானிக்கின்றன,
ஊரே பின்னால் இருந்தும் அரசியலுக்கு போகாத ஆச்சரியம் நீ.
சுத்தமானவன் வென்னீரில் குளிப்பவனல்ல வியர்வையில் குளிப்பவன்,
வியர்வை துளிகள் திரவ திப்பொறிகள் தேகமெங்கும் முளைக்கும் அதிசய சிறகுகள்.
மகேந்திர பல்லவனின் வியர்வை மாமல்லபுரத்தை நிர்மாணித்தது,
புத்த பிட்சுகளின் வியர்வையால் அஜந்தா ஓவியங்கள் அழகுற்றன,
டாவின்சியின் வியர்வை மோனோலிசாவின் முதுகுகளில் உட்கர்ந்துஇருகிறது,
உலக நாயகனின் வியர்வையால் உட்சரிகபடுகிறது உலகத்தில் தமிழ் சினிமா.
புதிய எல்லைகளை தொட ஓடிகொண்டிருகும் உனது புகழ் ஓங்கட்டும்.

அனைத்து கவிதைகளையும் கேட்ட கமல் "கவிஞர்களை நண்பர்களாக வைத்துகொள்வதில் ஒரு சவுகர்யம் என்னவென்றால் அவர்கள் திட்டினால் கூட அழகாக இருக்கும்" என்று அழகாய் சொல்லி நிறைவு செய்தார்.

என்னை பொருத்தவரையில் கவிஞர்களுடைய சிறப்பே
அவர்கள் கற்பனையில் உதிக்கும் அழகான பொய்தான். அவை பொய்யென்று தெரிந்தும் நாம் ரசிப்பதுதான் கவிதையின் வெற்றி. இங்கே கவிதைகளில் அவர்கள் எவ்வளவுதான் பொய் சொல்லி இருந்தாலும் அவை அனைத்தும் கமல் விசயத்தில் உண்மையாய் இருப்பதுதான் எனக்கு ஆச்சரியம். கமலிடம் கவிதைகூட தோற்கிறது. சில வரிகள் இன்றைக்கு பொய்யாய் இருந்தாலும் நிச்சயம் நாளை உண்மையாகும் என்பது திண்ணம்.

1 comment:

அருண் said...

மிக மிக அருமையான விமர்சனம்.
தமிழ் திரையுலகிற்கே கமல் ஒரு அரும் பெரும் பொக்கிசம்.

அதை இவ்வளவு அழகாக கூறியிருக்கும் உங்களுக்கு என் பாராட்டுக்கள்!

நன்றி