
பணி நிமித்தம் காரணமாக சென்ற வருடம் சில மாதங்கள் மும்பையில் இருக்க நேர்ந்தது. சென்னையை போல் அல்லாமல் அங்கே மக்கள் போக்குவரத்துக்கு முக்கியமாக பயன்படுத்துவது ரயில்கலைதான். ஆனால் அதில் பயணம் செய்வது ஒரு தனி கலை, அவ்வளவு எளிதில் சவுகரியமாக பயணம் செய்ய இயலாது. சென்னையை விட மும்பை மிக பெரிய மாநகரம், பேருந்தை மட்டும் நம்பி பயணம் செய்தால் எந்த வேலையையும் செய்யமுடியாது. ஹிந்தி தெரியாத பட்சத்தில், பேருந்தில் பயணம் செய்யும் போது நாம் இறங்கும் இடத்தை பல முறை அருகில் இருப்பவரிடம் வந்துவிட்டதா என்று கேட்க வேண்டும். ஆனால் ரயிலில் இந்த பிரச்சனை கிடையாது, கஷ்டப்பட்டு ஏறிவிட்டால் போதும், இறங்கும் இடத்தை அங்கே ஓட்டியிருக்கும் ரயில்வே வழிதடத்தை வைத்து தெரிந்து கொள்ளலாம். ஓட்டபடிருகும் இந்த ஒரு சிறிய sticker/map எந்த அளவுக்கு உதவியாக இருக்கும் என்பது ஹிந்தி தெரியாமல் மும்பையில் இருந்தால்தான் புரிந்துகொள்ள முடியும்.
சென்னை திரும்பிய பிறகு நம்முடைய லோக்கல் ரயிலில் இந்த வரைபடம் இல்லாதது ஒரு உருத்தலாகவே இருந்தது. வரைபடம் வைப்பது என்பது ஒரு சிறிய வேலை, இதைகூட வைக்க முடியாதா என்று தோன்றும். சென்ற வாரம் ரயில் ஏரிய போது ஆச்சரியப்படும் வகைகள் கண்ணில் தென்பட்டது இந்த வரைபடம். இருப்பினும் அனைத்து compartmentடிலும் இல்லாதது இன்னும் ஒரு குறையே. அதிக பட்ஜெட் தேவைபடாத இதுபோன்ற வேலைகளை கூட லாபத்தில் ஓடும் ஒரு துறையால் முழுமையாக செய்யமுடியாதா என்பதே என்னுல் எழும் கேள்வி.
No comments:
Post a Comment