Wednesday, December 19, 2007

சனீஸ்வரர் பாடல்

ஹிந்து மதத்தில் எல்லா கடவுளையும் தெரிசிக்க பல பாடல்கள் உண்டு. சில கடவுளின் பாடல்கள் மிக பிரபலமாக இருக்கும் சில கடவுளின் பாடல்கள் அப்படி இருக்காது. எனக்கு தெரிந்து சனீஸ்வரரை வழிபட உள்ள ஒரே பாடல் இதுதான். படித்து பயன்பெறுக.

மந்தனாம் சனியே உந்தன்
மகத்துவம் அறிந்து கொண்டேன்!
வந்ததோர் துயரம் நீக்கு
மனதினில் அமைதி கூட்டு!

எள்ளிலே தீபம் ஏற்றி
எதிரிலே வைதேன் ஈசா!
சொல்லை நான் செயலாய் மாற்றத்
துணைநின்று அருளுவாயே!

கருப்பினில் பிரியம் வைத்த
கனிவான சனியே! உன்னை
விருப்புடன் வணங்குகிறேன்!
வெற்றியை வழங்குவாயே!

காகத்தில் ஏறி நின்று
கனிவோடு வரத்தை நல்கி
தேகத்தை காக்கும் ஈசா!
செல்வத்தை வழங்குவாயே!

சூரியன் மகனாய் வந்து
சுகத்தினை வழங்கும் ஈசா
காரிய வெற்றி காண
கனிவுடன் அருளுவாயே!

நீலத்தில் பிரியம் வைத்த
நிகரில்லாச் சனியே! என்றன்
வாழ்விற்கு வழியை காட்டு!
வளர்ச்சியை நாளும் கூட்டு!

எதிர்ப்புகள் விலகி ஓட
இன்பங்கள் நாளும் சேர
மதிப்புடன் வாழ ஈசா!
மன்ங்கனிந்து அருளுவாயே!

கனவுகள் நானவாய் மாற
கரங்களில் செல்வம் சேர
மனதினால் உனைத் துதிதத்தேன் !
மகிழ்வுடன் அருளுவாயே!

காகவா கதைத் தோன் உன்னை
கண்டு நான் தெரிசிக்கின்றேன்!
யோகங்கள் வந்து சேர
விரைவினில் அருளுவாயே!

செல்வங்கள் நிறைய சேர
செல்வாக்கு வந்து கூட
நல்லவன் சனியே! நீயும்
நலம் தந்து அருளுவாயே!

No comments: