Sunday, February 03, 2008

கண்ணதாசன் ஒரு அருமருந்து


எவ்வளவோ எழுத்தாளர்களுடைய புத்தகங்களை படித்திருக்கிறேன். ஒவ்வொருவரும் கதை எழுதுவதில் வல்லவர்கள், கட்டுரை எழுதுவதில் ஜெயித்தவர்கள், தங்களுக்கென்று ஒரு எழுத்து நடையை உருவாக்கியவர்கள், வாசிப்பவரின் மீது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியவர்கள். ஆனால் எத்தனை பேரால் வாசகனுக்கு ஒரு தன்னம்பிக்கையை ஏற்பத்த முடியும்?. வாசகனுடைய அகஇருளை அகற்ற முடியும்? அவன் மனதை ஒரு சாந்த நிலைக்கு அழைத்து செல்ல முடியும்? இது கண்ணதாசன் ஒருவனால் மட்டுமே முடியும்.

"தனி ஒரு மனிதனின் வாழ்கையில் நடக்கும் எந்த ஒரு சம்பவத்திற்கும் பொருத்தமாக என்னுடைய பாடல் ஒன்று அங்கே ஒலிக்கும்" என்று சொன்னார் கண்ணதாசன். பாடல் ஒலிக்கிறதோ இல்லையோ, அன்றாடம் என் மனதில் ஏற்படும் மாற்றங்களுக்கு தோதாக அவருடைய வரிகள் எனக்கு பதிலளிதிருக்கின்றன.

எத்தனையோ பகிர்ந்துகொள்ள முடியாத விஷயங்களை மனதில் அசைபோட்டுக்கொண்டு இவருடைய எந்த புத்தகத்தை படித்தாலும் எனக்கு அதிலே விடை கிடைக்கிறது. கோபத்தோடு புத்தகத்தை கையில் எடுத்தால், படித்து முடிக்கும் போது மனம் அமைதி பெறுகிறது. என்ன வாழ்கை இது என்று நினைத்தால், இதுதான் வாழ்கை என்று ஒரு திடமான பதில் கிடைக்கிறது.

கடவுளிடம் நிறைய வேண்டியிருக்கிறேன். சில விஷயங்கள் நிறைவேறியிருக்கின்றன. சில இன்னும் அவர் கடைக்கண் பார்வைக்காக காத்துக்கொண்டிருகின்றன. ஆனால் எதுவும் வேண்டியவுடன் கிடைத்ததில்லை. பல மாதங்கள் பிரார்தனைக்கு பிறகு சில விஷயங்கள் நிறைவேறியிருக்கிறது. சில விஷயங்களுக்காக பல வருடங்களாக பிரார்த்தனைகள் தொடர்ந்துகொண்டிருக்கிறது. எவன் எவனோ வேகமாக முன்னேறுகிறான், இவ்வளவு வேண்டுதலுக்கு பிறகும் கடவுள் இன்னும் நமக்கு அதிர்ஷ்டட்தை தரவில்லையே என்று என்னும் போதெல்லாம்...
"காலங்களால் தெய்வத்தின் வருகை தாமத்தப்படும், யாரும் அவசர படக்குடாது" என்ற கவிஞரின் வார்த்தைகள் நினைவுக்கு வரும்.


டிப்ளோமா Textile முடித்து அதில் ஓராண்டு வேலையும் பார்த்தபோது, பின்னாலில் பொறியல் படிப்பேன் என்றோ அதுவும் கம்ப்யூட்டர் படிப்பேன் என்றோ ஒரு நாளும் நினைத்ததில்லை. என் அப்பா அவருடைய நண்பரை எதோ ஒரு இடத்தில் பார்த்திருக்கிறார். அதுவும் கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் கழித்து, அவரோடு பேசிக்கொண்டிரும்கும் போது என்னை பற்றி சொல்ல, அவரோ ஏன் மேலே படிக்கவில்லை, எனக்கு தெரிந்த கலூரியில் இடம் இருக்கிறது, "நான் சொன்னால் சேர்த்துகொள்வார்கள்" என்று சொல்ல. வேலையை விட்டு இரண்டே நாளில் கல்லூரியில் சேர்ந்தேன். ஒரு சிறு முயற்சிகூட நான் செய்யாமல் எனக்கு இடம் கிடைத்தது.

"மனிதன் வெளியில் நின்று விளையாடுகிறான்; தெய்வம் மறைந்து நின்று விளையாடுகிறது. தெய்வத்தை நம்புகிறவன், தோற்றாலும் ஜெயிகிறான்; நம்பாதவன் ஜெயித்தாலும் தோற்கிறான்." --கவிஞர் சொல்வது போல் கடவுளின் விளையாட்டு என்று சொல்வதை தவிர வேறு சொல்வதற்கில்லை.


சில இன்டர்வியு மோசமாக செய்தும் தேர்வாகியிருக்கிறேன். சில நன்றாக செய்தும் பாசிடிவ்வாக ரிசல்ட் வந்ததில்லை. இன்டர்வியுவில் fail ஆகும்போதெல்லாம் அதிக மனவருத்தமும் ஒரு வித பயமும் என்னை ஆட்கொண்டிருக்கிறது. அப்போதெல்லாம், "நோக்கம் உன்னுடையது, ஆக்கம் அவனுடையது. அதிக பட்சம் மனிதன் செய்யக் கூடியதெல்லாம் முயற்சியே. அவனால் செய்ய முடியாத விஷயங்களே நூற்றுக்கு தொண்ணூறு." என்ற வாக்கியமே மருந்தாக இருந்திருக்கிறது.

செக்ஸ்சை பற்றி நண்பர்களோடு அவ்வபோது விவாதித்திருகிறேன். அவனவன் பார்த்ததை, கேட்டதை, படித்ததை வைத்து என்னென்னவோ உளறுவான். யாரும் அதற்கு கவிஞரை விட ஒரு அழகான விளக்கத்தை கொடுத்ததில்லை.

"ஆலிலை மேலொரு மேகலை ஆட,
ஆசை கனிகள் மாலையில் வாட,
பாதி விழிகள் காதலில் மூட,
பாலில் விழுந்த பழம் போல் ஆட,
நீ தரவேண்டும்; நான் பெறவேண்டும்!
நிலவினில் ஆடும் நிம்மதி வேண்டும்!"

குளிர் காலத்தில் மூக்கடைப்பு, ஜலதோஷம் அதை ஒட்டி உடல்வலி ஏற்பட்டு பல விஷயங்கள் செய்யவேண்டும் என்று நினைத்து உடல் ஒத்துளைக்காமல் போன தருணங்கள் உண்டு. அபோதெல்லாம் மருத்துவரையே அதிகம் நாடியிருகிறேன்.
"ஜனனத்துக்கும் மரணத்துக்கும் எவன் பொறுப்பேற்றுகொண்டானோ, அவனே இடையில் ஆரோகியதிற்கும் பொறுப்பேற்று கொள்ள வேண்டியவன். மருதுவர்கள் செய்யகூடியவையெல்லாம் தற்காலிக சோதனைகளே. நிரந்தரமான ஆரோக்கியத்தை அந்த சுப்ரீம் டாக்டரே தரமுடியும்" -- என்று படித்த பின்புதான் கடவுளை நாடியிருக்கிறேன் அதில் இருந்து விடுபட்டிருகிறேன்

எத்தனை நண்பர்கள் இருந்தாலும் சில நேரங்களில் புதிய வேலை, புதிய இடம், புதிய பழக்கவழகத்திற்கு மாறும் போது நம்மையும் அறியாமல் "எச்சரிகையாக இருக்கவேண்டும்" என்ற எண்ணம் தோன்றும். சுற்றி இருப்பவர்கலில் நண்பர்களை காட்டிலும், காரணமே இல்லாமல் கவிழ்க்க பார்போரே அதிகம். இவர்களை நான் சமாளிக்க வேண்டும் அத்தோடு என் வேலையையும் பார்த்தாக வேண்டும். எனக்கு மட்டும் ஏன் இந்த நிலை என்று என்னும்போது, உனக்கு மட்டுமில்லை எனக்கும் இதே நிலை தான் என்று ஆறுதல் சொல்கிறார்.

"எனக்கு முன்னால் மயில் ஆடிக்கொண்டிருக்கும்
பின்னால் கரடி பாயந்துகொண்டிருகும்
தலைக்கு மேலே, தேவர்கள் பூமாரி பொழிவார்கள்,
காலுக்கு கீழே, கருநாகங்கள் படையெடுத்துக்கொண்டிருகும்,
மலை பெய்யும் போதே வெயில் கொளுத்தும்,
என் பக்கத்தில் மனிதர்களும் உட்கார்ந்துகொண்டிருபார்கள்,
பேய்களும் உட்கார்ந்துகொண்டிருக்கும்,
நான் மயகதிலும், சங்கீததிலுமே நிம்மதியை கண்டேன். "

தினமும் கடவுளை வழிபடுகிறேன். என் வழிபாடு என்பது, கடவுளிடம் இன்றைக்கு நான் எதிர்பார்ப்பது நடக்கவேண்டும் என்பதோடு முடிந்துவிடும். ஆனால் கடவுளிடம் என்ன கேட்கவேண்டும் என்பதுகூட அவர் பாடலை பார்த்துத்தான் தெரிந்துகொண்டேன். எண்ணக் கேட்கவேண்டும், எப்படி கேட்கவேண்டும்.இதோ..

"மனையவள் வாழ்வு மாண்பு கெடாமல்,
இல்லையென்றொரு நாளில்லாமல்
இன்னும் என்னும் ஆசை வராமல்,
தொல்லை என்பது துளியுமில்லாமல்,
தொற்றும் நோய்கள் பற்றிவிடாமல்,
முதுமை துயரம் மூண்டு விடாமல்,
படுக்கையில் விழுந்து பறிதவிக்காமல்,
வாழ்ந்தால் இப்படி வாழ்வது நன்றென ஊரார் மெச்சிட...."

திருமணத்திற்கு பின்பு ஒருவன் குடும்பத்தில் எப்பேற்பட்ட ஒரு நிலையை எடுக்க வேண்டும் என்பதை இதைவிட அழகாக யாரும் சொல்ல முடியாது.
"திருமணத்திற்கு பின்பு எனக்கு தருகின்ற இன்பசுகங்களுகாக என் தலை மீது ஏறி உட்கார்ந்துகொண்டு என் தாயாரை அவள் விலை பேச முடியாது. என் குடும்பத்தை பொறுத்த வரையில் என் தாய் என்பவள் தான் ராணி அந்த ராணிக்கு தோழிதான் என் மனைவியே தவிர, அவள் ராணி என்கின்றன அந்தஸ்தை அடைய முடியாது. அவளுக்கு வருகின்ற மருமகளுக்கு வேண்டுமானால் அவள் ராணியாக இருக்கலாம் என் தாய்க்கு அவள் தோழியாகதான் இருந்தாகவேண்டும். இல்லையனில் அவளை என் மனைவியாக அங்கிகரிக்க மாட்டேன்." -- எத்தனை பேரால் இப்படி சொல்லமுடியும்.


சென்ற வருடம் அமெரிக்காவுக்கு வருவதற்காக என் கம்பெனியின் மூலமாக H1B அப்ளை செய்திருந்தேன். முதல் முறையாக சென்றவருடம் லாட்டரி சிஸ்டம் முறையை அறிமுகப்படுதியிருந்தர்ர்கள். குழுக்கள் முறையில் தேர்ந்தெடுப்பதுபோல், கம்ப்யூட்டர் தானாக தேர்ந்தெடுகும் நபர்களுக்கு மட்டுமே H1B கிடைக்கும். என் கம்பெனியில் இருந்து apply செய்த 23 பேரில் மூவருக்கு மட்டுமே கிடைத்தது, அதில் நானும் ஒருவன். அனைவரின் பாரடுதலுக்கு நடுவில், நான் தேர்வானது எனக்கே வியப்பை அளித்து. அப்போது கூட கவிஞரின் வரிகளே நியபகாம் வந்தது.
"நீ அள்ளிபோட்ட மண் எல்லாம் பொன்னாக விழுந்தால், அது உன் கைவண்ணமும் அல்ல, மண் வண்ணமும் அல்ல, கடவுளின் கருணை வெள்ளம்."

உறவுமுறைகள் என்றும் மாறுவதில்லை. தாய்க்கு என்றும் அவள் மகன் மகன்தான். பிள்ளைக்கு என்றும் அவன் தந்தை தந்தைதான். ஆனால் கண்ணதாசன் எனக்கு என்றுமே ஒரே மாதிரி தெரிந்ததில்லை. சிலே நேரங்களில் கடவுளின் அவதாரமாக, ஞாநியாக, ஜோசியராக, மனநல மருத்துவராக, சமவயது தோழனாக மாறி மாறி தெரிந்திருகிறார். தெரிந்துகொண்டிருகிறார்.
KEY WORDS: KANNADHASAN, KANNADASAN.

8 comments:

Divya said...

கண்ணதாசனின் எழுத்துக்களை பல துருவங்களில் இன்றுதான் முதன் முறையாக உங்கள் பதிவின் மூலம் அறிந்துக்கொண்டேன்,
அருமையானதொரு பதிவு!

உங்கள் அமெரிக்க வாழ்க்கை இனிமையாக தொடர என் வாழ்த்துக்கள்!

manipayal said...

கண்ணதாசனின் கற்பக வரிகளை அருமையாக தொகுத்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்

Gowri Shankar said...

நீங்கள் எழுதியவைகளிலேயே இது மிகவும் சிறப்பான கட்டுரை. வாழ்த்துக்கள்!

Raja said...

Thanks you very much Divya, Mani & Gowri.

ஜன்னல் said...

உலகம் ஒரு கிராமம்
ஆஹா
உண்மையாகி விட்டதே

ஹரிபாஸ்கர்
மிக்க நன்றி
கண்டுபிடித்து
விசாரித்ததற்கு.

நன்றாக இருக்கிறேன்
அங்கு உன் நலம் எப்படி?

கண்ணதாசனை
எப்பொழுதும் துணைக்கு வைத்துக்கொண்டு
வாழ்வை வசப்படுத்தும் கலையை
தெரிந்துகொண்டது கண்டு
மகிழ்ந்தேன்.

தொடரட்டும்
உன்
முடிவில்லா
வெற்றிகள்.

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

இப்போதுதான் இந்தப் பதிவைப் படித்தேன். எனது ஆசான் கண்ணதாசனைப் பற்றியது என்றவுடன் ஆர்வம் வேலிட உட்புகுந்து உன்மத்துடன் படித்து தெளிந்தேன்.

கண்ணதாசனைப் படித்தவர்கள் அனைவருக்கும் அவன் ஒரு ஆசான்.. அவர்கள் அறியாமலும், அவர்கள் கேட்காமலும் அவனே அவர்களை ஆக்கிரமித்துக் கொள்கிறான்.. இது நிஜம்..

நீங்கள் உணர்ந்தது இறைவனை, கண்ணதாசன் உருவத்தில். அவன் அடையாளம் காட்டியிருக்கிறான் இறைவனை..

நன்றிகள் உங்களுக்கு..

அனுபவமே இறைவன்.. சொன்னவன் கண்ணதாசன். ஏனெனில் அவனுக்குக் கிடைத்த அனுபவமும் இப்படித்தான்..

வாழ்க வளமுடன்

R A J A said...

@ ஜன்னல்,
//தொடரட்டும்
உன்
முடிவில்லா
வெற்றிகள்.
//
வாழ்த்துக்கு ரொம்ப Thanks அண்ணே. விரைவில் சிந்திப்போம்.

@ உண்மைத் தமிழன்,
//அவர்கள் அறியாமலும், அவர்கள் கேட்காமலும் அவனே அவர்களை ஆக்கிரமித்துக் கொள்கிறான்.. //
நூறு சதவிகிதம் உண்மை. பதிவுலகத்தில் நீண்ட காலமாக இருப்பவர் நீங்கள், உங்களுடைய வருகைக்கும் கமெண்ட்டுக்கும் நன்றி.

Deiva said...

I just came across your blog today. Good work! All good quotes from Kannadasan