Friday, February 29, 2008

காதல், காமம், பொசசிவ்........

அதிகம் வெளிப்படையாக பேசவோ எழுதவோ பகிர்ந்துகொள்ளவோ முடியாத ஒரு தலைப்பு. தன்னம்பிக்கைக்கும் தலைகனத்திற்கும் ஒரு நூலளவுதான் வித்தியாசம் என்பார்கள். காதல், காமம், Possessiveness போன்றவற்றிற்கும் அதே அளவுதான் வித்தியாசம். இந்த உணர்வு எனக்கில்லை என்று யாரும் சத்தியம் செய்ய முடியாது. கண்டிப்பாக இருக்கும், விகிதாசாரம் வேண்டுமானால் மாறுபடலாம். நான் விரும்பும் நபர் எனக்காக மட்டுமே வாழ வேண்டும் என்கிற எண்ணம் தான் Possessiveness. காதல் என்கிற உணர்வை பல கோணங்களில் படம் எடுத்துள்ள எந்த இயக்குனரும் இந்த உணர்வை தொட்டதில்லை. காரணம் இது எழுத்தின் மூலமோ அல்லது visualலாக convey செய்வது மிகவும் கடினம். எனக்கு தெரிந்து இந்த உணர்வை சிதைக்காமல் அப்படியே காட்டிய படம் குஷி, காதல் கொண்டேன் மற்றும் உன்னை சரணடைந்தேன். முதல் இரண்டு படங்கள் காதலர் இடையேயும் மற்றொன்று நண்பர்கள் இடையேயும் உள்ள Possessiveness பற்றி சொன்ன படங்கள்.
அன்பு என்பது கையில் உள்ள நீரைப்போன்றது, அதை பிடிக்க நினைத்து மூடினால் கையை விட்டு வெளியேறிவிடும் என்று விவேகானந்தர் சொல்லுவார். எந்த உறவுகுமே இந்த எடுத்துக்காட்டு பொருந்தும். "எனக்கே எனக்காக" என்கிற எண்ணம் வளர ஆரம்பித்தால் அதன் விளைவு எதிர்மறையாகத்தான் இருக்கும்.

ஏதோ ஒருவரை பார்த்த உடனே இந்த உணர்வு வந்துவிடாது. விதையிலிருந்து மரம் உண்டாவதைப்போல் மெல்ல மெல்ல வளரும். கடலிலே அலை அடிபதைபோல் ஒரு நொடி விடாமல் தாக்கும். உப்புத்தண்ணீர் இரும்பை அறிப்பதுபோல் மனதை கரைக்கும். ஒரு கட்டத்தில் அபின் கஞ்ஜாவிலே இல்லாத போதை இந்த உணர்விலே கிடைக்கும்.

நான் செய்வது தவறு என்று தெரியும். இனிமேல் தொந்தரவு செய்யக்கூடாது என்று தோன்றும். ஆனால் இது அத்தனையும் முகத்தை பார்க்கும் வரையில்தான். முகத்தை பார்த்தவுடன், ஆட்டை வெட்டுவதற்கு முன்பு பறந்துபோகும் கசாப்புக்கடைக்காரனின் மனிதாபிமானத்தை போல் பறந்து போகும். "என் அன்புக்கு அடிமையாய் இரு" என்று குரல்வளையை பிடிக்க விரல்கள் துடிக்கும்.

அப்படியென்றால் இந்த Posessivenessல் இருந்து மீளவே முடியாத? நிச்சயம் முடியாது. இதிலிருந்து தப்பிக்க வேறு வழியே கிடையாதா? கிடையாது. அப்படியென்றால் இதற்கு என்னதான் தீர்வு? தள்ளியிருங்கள், பேசாமல் இருங்கள், பார்க்காமல் இருங்கள். அதிகம் நேசித்த பாவத்திற்கு இந்த தண்டனையை அனுபவித்தே தீரவேண்டும்.

The fear of losing those whome we love makes us possessive
towards them, which is why we lose them.
" -- Arthi Honrao

1 comment:

Alexander said...

The fear of losing those whome we love makes us possessive
towards them, which is why we lose them." -- Arthi Honrao

Nice one.