Thursday, March 13, 2008

தன்னம்பிக்கை டானிக்

இப்போதைக்கு கண்ணதாசனின் இந்த வரிகள்தான் எனக்கு தன்னம்பிக்கை டானிக்.
வாழ்க்கை யென்றால் ஆயிரமிருக்கும்
வாசல் தோறும் வேதனையிருக்கும்
வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை!
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்!

ஏழை மனதை மாளிகையாக்கி
இரவும் பகலும் காவியம் பாடி
நாளைப் பொழுதை இறைவனுக் களித்து
நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு!
உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு!

3 comments:

இராஜராஜன் said...

வணக்கம் சொக்கலிங்கம்

எனக்கு இந்த வரிகளில் நம்பிக்கை கிடையாது

நாளைப் பொழுதை இறைவனுக் களித்து
நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு!
உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு!
வரிகளில்

இவை ஒரு மனிதனின் தன்முனைப்புத்திறனை குறைத்து அவனை எதர்கும் காரணம் சொல்லும் சோம்பேரியாக மாற்றும் என்று நிணைக்கின்றேன்


முந்திரி கொட்டை தனமாக என் மறுமொழி இருந்தால் மண்ணிக்கவும்

நீங்கள் எதை நிணைத்து இந்த பதிவை இட்டீர்கள் என எனக்கு தெரியாது

இந்த வரிகள் என்னை ரொம்ப நாட்களாக என்னை உறுத்திய வரிகள் அதனால் இந்த மறுமொழி

நன்றி

இராஜராஜன்

Raja said...

@ இராஜராஜன்
//இவை ஒரு மனிதனின் தன்முனைப்புத்திறனை குறைத்து அவனை எதர்கும் காரணம் சொல்லும் சோம்பேரியாக மாற்றும் என்று நிணைக்கின்றேன்//
நீங்கள் சொல்லுவது நூறு சதவிதம் உண்மை. ஆனால் அனைத்து முயற்சியையும் செய்து பார்த்துவிட்டு எதிர்பார்த்த பலன் இல்லாத போது இந்த வரிகளை நினைத்துகொள்வது சற்று நிம்மதியை தரும். அதுபோன்ற ஒரு சூழ்நிலையில் பதிவிட்டதுதான் இந்த இடுக்கை.

Anonymous said...

raja...

These lines are true.Ur answer is exactly correct...

thanks...