Saturday, May 03, 2008

குருவி விமர்சனம்


கல் குவாரியில் அடிமை தொழிலாளிகளாக சிக்கித்தவிக்கும் தன் அப்பாவையும் அவருடன் உள்ள மற்றவர்களையும் மீட்பதற்காக சுமன், ஆஷிஸ் வித்யாதிரி, 'கடப்ப' ராஜா, சூரி போன்ற வில்லன்களுடன் மோதும் கதைதான் குருவி. ஆரம்பத்தில் மாளவிகா, விவேக், பாடல் என்று அமர்களமாக ஆரம்பிக்கும் படம் போக போக படு போர். பல இடங்களில் அப்படியே கில்லியை நினைவு படுத்துகிறது காட்சிகள்.

ஒரு வெற்றிப்படம் கொடுத்த கூட்டணியினர் மீண்டும் இணையும் போது பழைய படத்தின் சாயல் கொஞ்சம் கூட இல்லாமல் தவிர்த்திருக்க வேண்டும். ஆனால் இங்க வலுக்கட்டாயமாக சேர்த்திருக்கிறார்கள். 80% படத்தில் கதை/காட்சியமைப்பு அப்படியே கில்லியை நினைவு படுத்துகிறது. அநியாயத்துக்கு செண்டிமெண்ட் பார்த்திருக்கிறார்கள்.
உதாரணத்திற்கு சில.....
 1. கில்லியில் கபடி ரேஸ் முடிந்து கோப்பை வாங்கியவுடன், கதை, திரைக்கதை இயக்கம் தரணி என்று பெயர் வரும். இதில் கபடிக்கு பதில் கார் ரேஸ் அவ்வளவுதான் வித்தியாசம்.
 2. இரண்டு படத்திலும் போட்டியில் ஜெயித்தவுடன் பாடல்.
 3. இதிலும் விஜயின் பெயர் வேலு. அதில் சரவனவேலு இதில் வெற்றிவேலு.
 4. 'அப்படி போடு' பாடலுக்கு பதில் 'மொல மொல' பாடல்.
 5. ஆடியோ casset வெளியிட்ட இடம் Little Flower ஸ்கூல்.
 6. படம் ரிலீஸ் ஆனா நாள் அதே சனிக்கிழமை.
 7. இரண்டு படத்திலும், இடைவேளைக்கு முன்பு த்ரிஷாவை இழுத்துக்கொண்டு ஓடுவது. அதை தொடர்ந்து வரும் chasing காட்சிகள்.

இடைவேளை வரை படத்தை காப்பாற்றும் விவேக் பின்பாதியில் ஒரு காட்சியில் கூட இல்லாமல் போனது மிகப்பெரிய மைனஸ் பாயிண்ட். கிராபிக்ஸ் காட்சிகள் அனைத்தும் படு கேவலம். விஜய் மாடியில் இருந்து குதித்து, கிலோ மீட்டர் தள்ளி இருக்கும் ரயில்வே track அருகில் landஆவது மிகப்பெரிய்ய அபத்தம். அதிலும் trainனின் வேகத்திற்கு ஓடுவது செம்ம காமெடி. எதை எடுத்தாலும் பார்ப்பார்கள் என்று எடுத்திருக்கிறார்கள். ஒரு லேப்டாப்ல் மொத ரகசியத்தையும் வைத்திருப்பது, அதன் password தெரியாமல் வில்லன்னும் விஜய்யும் முழிப்பது, e-mailலில் விஜய் அனைத்து ரகசியத்தையும் போலிசுக்கு அனுப்புவது, அங்கங்கே webcam வைத்திருப்பது போன்றே சீரியஸ் ஆனா காட்சிகள் கூட காட்சி அமைப்பால் காமெடி ஆகிப்போனது. வில்லன்கள் அனைவரும் காட்டு தனமாக கத்துகிறார்கள், இந்த நிலை எப்போதுதான் மாறுமோ. Realistic வில்லன்களை பார்த்து ரொம்ப நாள் ஆகிவிட்டது. என்னக்கு தெரிந்து 'கனா கண்டேன்' படத்தில் பிரிதிவிராஜ் வில்லன் ரோலில் அழகாக நடித்திருப்பார்.

தியேட்டரில் கேட்ட சில கமெண்ட்ஸ்...

 1. இத்தனை வில்லன்கள் இருந்தும் ஒருத்தன் கூட குருவி சுட கூட லாயக்கில்லை.
 2. இந்த படத்த Dhoni வேற பார்தானம், அதான் last மேட்ச் தோத்துட்டானுங்க.
 3. மச்சான் கன்ன மூடிக்க, விஜய் மேலிருந்து குதிக்க போறான், எங்க போய் land ஆகா போறான்னு தெரியல.
 4. விஜயகாந்த் படத்தையே முந்திட்டானுங்க.

என்னதான் விளம்பர படுத்தினாலும் படம் ஓடுவது ரொம்ப சிரமம். விவேக் மற்றும் பாடலுக்காக 40 நாள் ஓடினாலே பெரிய விஷயம். சீக்கிரமே கலைஞர் டி.வில படத்த பாக்கலாம்.

9 comments:

Veera said...

தியேட்டர்ல கேட்ட ரெண்டாவது கமெண்ட் டாப்புங்னா!!

mouli said...

முத‌லில் அழ‌கிய‌ த‌மிழ் ம‌க‌ன் அடி வாங்கிய‌து, இப்போது குருவி , விஜ‌ய் இனி எழுந்திருக்க‌ வேண்டும் என்றால் கொஞ்ச‌ம் அடி த‌டி ம‌சாலா ப‌ட‌ங்களை விட்டுவிட்டு அவ‌ர் முன்ன‌ர் ந‌டித்த‌ துள்ளாத‌ ம‌ன‌ம் துள்ளும் , குஷி , பிரிய‌மான‌வளே போன்ற‌ ந‌ல்ல‌ ப‌ட‌ங்க‌ளில் ந‌டிக்க‌ வேண்டும், நிலைத்து நிற்க‌ வேண்டும் என்றால் ஆக்ஷ‌ன் ப‌ட‌ங்க‌ளில் ந‌டித்தே ஆக‌ வேண்டும் என்ற‌ ம‌ன‌நிலையில் அவ‌ர் இருப்ப‌தால் இனி அவ‌ர் ந‌ல்ல‌ ப‌ட‌ங்களில் ந‌டிப்பார் என்று கூறுவ‌த‌ற்க்கில்லை !

Raja said...

இன்னும் நிறைய கமெண்ட்ஸ் அடுசாங்க veera....
இது ஆதி part 2னு கூட சொன்னாங்க.

Raja said...

//அடி த‌டி ம‌சாலா ப‌ட‌ங்களை விட்டுவிட்டு அவ‌ர் முன்ன‌ர் ந‌டித்த‌ துள்ளாத‌ ம‌ன‌ம் துள்ளும் , குஷி , பிரிய‌மான‌வளே போன்ற‌ ந‌ல்ல‌ ப‌ட‌ங்க‌ளில் ந‌டிக்க‌ வேண்டும்//
ரொம்ப கரெக்ட். நல்ல இயக்குனர்களை நம்பி அவர் தன்னை ஒப்படைக்கவேண்டும். Perrasu, Ramanaபோன்ற இயக்குனர்களை நம்பி இனி பிரயோஜனம் இல்லை, கத்தி கத்தி பேசுரத்தையும், screenன பார்த்து பேசுரத்தையும் முதலில் விடனும்.

ஓவியா said...

நான் இந்த படத்தை இன்று பார்க்கலாம் என்று இருந்தேன்..
உங்கள் விமர்சனம் காப்பாற்றி விட்டது.. நன்றி :)

யாத்திரீகன் said...

:-) very happy to hear that..

Raja said...

@ஓவியா
//நான் இந்த படத்தை இன்று பார்க்கலாம் என்று இருந்தேன்..
உங்கள் விமர்சனம் காப்பாற்றி விட்டது//
Freeயா டிக்கெட் கிடைச்ச பாருங்க.....காசு கொடுத்து பாக்குற அளவுக்கு நல்ல படம் கிடையாது.
___________________________________
@யாத்திரீகன்
//:-) very happy to hear that..//
Me too.

Vaasu said...

குமுததில் தரணியின் பேட்டி:
இந்த படம் வந்த பிறகு இனி தமிழகதில் யார் அடுத்த இளைய தளபதி என்று போட்டி வரும்.
நல்ல விமர்சனம்: நல்ல மூக்குடைப்பு (ஓவரா பேசியவர்களுக்கு)

Anonymous said...

"குருவி" டைட்டில் விஜய்-ன் ஹேர் ஸ்டைல் (குருவிக்கூடு) பார்த்து வச்சிருப்பாங்களோ ...