Sunday, May 11, 2008

தேவையா இந்த பில்ட்-அப்


டைரக்டர் தரணி எனக்கு 'குருவி'க்காகச் சொன்னது சின்ன அவுட் லைன். 'கில்லி'யில் என்னை பெரிய உயரத்துக்கு ஏத்திவிட்டவர்... உடனே சரின்னு சொல்லிட்டேன். சில கூட்டணி தப்பு பண்ணவே பண்ணாது. அதில் ஒண்ணு... விஜய் தரணி த்ரிஷா!'' -- த்ரிஷா Dec 2007.

ஒரு சில படங்களில் நடிக்கும்போது, அந்த படங்கள் மிகப்பெரிய வெற்றி அடையும் என்று எனது உள்ளுணர்வு சொல்லும். படத்தின் வெற்றி குறித்து ஒரு நம்பிக்கை இருக்கும். அந்த நம்பிக்கை பெரும்பாலும் சரியாக அமையும். `குருவி' படத்திலும் அந்த நம்பிக்கை எனக்கு ஏற்பட்டது. -- விஜய்

‘‘ட்ரிபிள் கில்லி எதிர்பார்க்கிறோம் தரணி!’’ என்று சொல்லித்தான் தரணியிடம் பேச்சுவார்த்தையே ஆரம்-பித்தார்களாம். ‘‘அசின், த்ரிஷா, ஸ்ரேயா என மூவருள் ஒருவரையோ அல்லது மூவரையுமேவோ கமிட் செய்து-கொள்ளுங்கள். ரஜினிக்கு ‘பாட்ஷா’ போல விஜய்க்கு இந்தப் படம் அமைய வேண்டும்!’’ என்று சொல்லியிருக்கிறார் உதயநிதி.
இந்த படம் வெளிவந்த பிறகு, அடுத்த இளையதளபதி யாருனு தான் எல்லோரும் பேசுவாங்க -- தரணி
இந்த படத்துக்காடா இவ்வளவு பில்ட்-அப் கொடுத்தீங்க?

5 comments:

ச்சின்னப் பையன் said...

படம் சூப்பர்... குருவியை சொல்லலே.. பதிவில் நீங்க போட்டிருக்கிற படம்...:-)))))))

எம்.ரிஷான் ஷெரீப் said...

யாருப்பா அது?
நம்ம இளைய தளபதியைக் கிண்டல்பண்றது?
முடிஞ்சா அந்த நாலு பேரையும் உங்க படத்துல போட்டிருக்கிற மாதிரி 'தில்'லா 'கில்லி' மாதிரி கட்டிக் கடல்ல போட்டு 'தூள்' கிளப்புங்க பார்க்கலாம். :)
'குருவி' போன்ற ஒரு குப்பையிலிருந்து எல்லோருக்குமே விமோசனம் கிடைக்கும் பா :P

R A J A said...

@ச்சின்னப் பையன்...
//படம் சூப்பர்... குருவியை சொல்லலே.. பதிவில் நீங்க போட்டிருக்கிற படம்...:-)))))))//
நன்றி ச்சின்னப் பையன் அவர்களே. பொருத்தமான படமா தோணுச்சு அதான் எடுத்து போட்டேன்.

@எம்.ரிஷான் ஷெரீப்...
//முடிஞ்சா அந்த நாலு பேரையும் உங்க படத்துல போட்டிருக்கிற மாதிரி 'தில்'லா 'கில்லி' மாதிரி கட்டிக் கடல்ல போட்டு 'தூள்' கிளப்புங்க பார்க்கலாம். :)//
'எதிரும் புதிரும்'மா சந்திக்கும்போது கண்டிப்பா பண்றேன் ஷெரீப்.

முரளிகண்ணன் said...

திரைத்துறையினர் பேட்டி 70% பில்ட் அப் என்றால் ஆனந்த விகடன் போன்ற பத்திரிக்கைகள் அதை 100% எழுத்தில் கொண்டு வருகின்றன.

மங்களூர் சிவா said...

கருமம் கருமம் :(