Wednesday, June 11, 2008

தசாவதாரம் விமர்சகர்களுக்கு ஒரு வேண்டுகோள்

விமர்சனம் செய்யும் பலரும் கதையை முழுவதுமாக சொல்லிவிட்டு பிறகு விமர்சனத்தை தொடங்குகிறார்கள். குறிப்பாக படத்தின் திருப்புமுனையாக உள்ள முக்கியமான காட்சிகளைக்கூட அப்பட்டமாக சொல்லுவது அடுத்து படத்தை பார்ப்பவர்கள்ளுக்கு சுவாரஸ்யத்தை குறைக்கும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். உதாரணத்திற்கு கில்லியில் விஜய், த்ரிஷாவின் கழுத்தில் கத்தி வைக்கும் காட்சியாகட்டும், ரன் படத்தில் மாதவன் சப் வேயில் பயந்து ஓடுவது போல் ஓடி அந்த சட்டரை மூடும் காட்சியாகட்டும், அந்த காட்சியை சொல்லாமல் சுவாரஸ்யம் கூடும் முறையில் நம் விமர்சனம் அமைந்தால் நன்றாக இருக்கும். இது எதுக்கு இப்போன்னு கேட்க்குறிங்களா? தசாவதாரம் படம் ரிலீஸ் ஆகப் போகுது, விமர்சனம் என்ற பெயரில் யாரும் கதையை முழுமையாக சொல்லவேண்டாம் என்ற வேண்டுதளுக்குதான் இந்த பதிவே.
ஒரு பத்திரிக்கை விமர்சனம் எழுதுவதற்கு கூட ஒரு வாரம் ஆகலாம், ஒரு நாளேடு விமர்சனம் செய்வதற்கு ஒரு நாள் ஆகும், சேட்டிலைட் டி.வி விமர்சிப்பதற்கு கூட அறை நாள் ஆகும், ஆனால் நம் வலையுலக நண்பர்கள் படம் பார்த்த ஒரு மணி நேரத்தில் எழுதும் விமர்சனம் பல ஆயிரக்கணக்கான பேர்களை உடனே சென்றடைகிறது, அதனால்தான் இந்த வேண்டுகோள்.

இந்த படத்தின் வெற்றிக்கு நம்மால் முடிந்த ஒரு சிறு முயற்சியாக இது இருக்கட்டும், ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் .

4 comments:

முரளிகண்ணன் said...

வழிமொழிகிறேன்

ச்சின்னப் பையன் said...

கண்டிப்பாக...

நாளைக்கு குறைந்த பட்சம் ஒரு பத்து விமர்சனமாவது எதிர்பார்க்கிறேன்...

நான் சனிக்கிழமையன்று படம் பார்க்கும்வரையாவது சஸ்பென்ஸ் இருக்கட்டும்.....:-))))

R A J A said...

@முரளிகண்ணன்...
வருகைக்கு நன்றி

@ச்சின்னப் பையன்....
//நாளைக்கு குறைந்த பட்சம் ஒரு பத்து விமர்சனமாவது எதிர்பார்க்கிறேன்...//
பத்தா? அதை தாண்டும் என்பது என்னுடைய கணக்கு....

கிரி said...

இனி ஒரு வாரத்துக்கு எந்த பதிவு போட்டாலும் அது வேஸ்ட் தாங்கோ....சூடானா இடுகை முழுவதும் விமர்சனங்களே ... :-)

கமல் படம் விமர்சனம் இல்லாத மாற்ற வகை இடுகைகளை போன போகுதுன்னு படித்தால் தான் உண்டு :-))))