Friday, June 20, 2008

கலைஞர், ஞாநி, சினிமா....

அரசியல் சாணக்கியன் என்றால் அது கலைஞர் என்பது உலக தமிழர்கள் அறிந்த ஒரு விஷயம். இப்போது பா.ம.கவை கூட்டணியில் இருந்து விலக்கியிருப்பது அவருடைய அரசியல் தந்திரத்திற்கு மேலும் ஒரு எடுத்துக்காட்டு. பா.ம.க கூட்டணியில் இருந்தால் எப்படியும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிக இடம் கேட்டு நெருக்கடி கொடுக்கும், அ.தி.மு.கவும் பா.ம.கவை இழுப்பதற்கு அதிக முயற்சி எடுக்கும். இந்த நிலையை நன்றாக பயன்படுத்திக்கொண்டு பா.ம.க எப்படியும் சென்ற முறையை விட இந்த முறை அதிக சீட் வாங்கி வளர்சிகானும் என்பதை மனதில் வைத்து இப்போது அதை கூட்டணியில் இருந்து விலக்கியிருக்கீறார் கலைஞர். பா.ம.கவுக்கு இப்போது அ.தி.மு.கவுடன் கூட்டணி வைப்பதை தவிர வேறு வழியில்லை. ஆனால் ஜெயலலிதா கொடுக்கும் சீட்டை வாங்கியாகனுமே தவிர சென்ற முறையை விட அதிக இடம் வாங்க முடியாது. கலைஞருடைய இந்த மூவ், பா.ம.க வை demanding sideல் இருந்து receiving end க்கு கொண்டுவந்தது என்பது மட்டும் உண்மை.

ஓ...பக்கங்கள் தொடரை முன்பு ஆனந்த விகடனிலும் இப்போது குமுதத்திலும் எழுதிவரும் ஞாநி, இரண்டு மாதமாக குமுதம் வெப் டி.விகாக ஞாநி பேசுகிறேன் என்ற நிகழ்ச்சியின்
மூலமாக பேட்டியும் எடுத்துவருகிறார். ஓ...பக்கங்களை பொறுத்த வரையில் எந்த விஷத்தை பற்றி ஞாநி எழுதினாலும் அதை படித்து முடிக்கும் போது நாம் அவருடைய கருத்துக்கு தலையாட்டும் நிலைக்கு வந்து விடுவோம். அந்த அளவுக்கு வீரியத்துடனும், புள்ளிவிவரங்களுடனும், சான்றுகளுடனும் அவருடைய எழுத்துக்கள் இருக்கும். இதனாலேயே அவருக்கு கிடைத்த பல கோடி ரசிகர்களில் நானும் ஒருவன். தற்ப்போது அவர் எடுக்கும் பேட்டியை பொறுத்த வரையில், பொதுவாழ்க்கைக்கு வந்தவர்கள் பலதரப்பட்ட கேள்விகளையும் சந்தித்தாகவேண்டும் என்ற முனைப்போடு பலர் கேட்க தயங்கும் கேள்விகளை கேட்பது பாராட்டுக்குரியது. ஆனால் சில நேரங்களில் பங்கேற்ப்பவருடைய personal விஷயங்களில் அதிகம் தலையிடுவது பார்க்கும் நமக்கு சற்று அருவருப்பாகவே உள்ளது. உதாரணத்திற்கு, எழுத்துசித்தர் பாலகுமாரனுடனான நேர்கானலில், "நீங்கள் இரண்டு மனைவியோடு ஒரே வீட்டில் வாழ்கிறீர்கள் அதேபோல் உங்களுடைய மனைவி இரண்டு கணவனோடு அதே வீட்டில் வாழ நினைத்தால் அனுமதிப்பிர்களா?" போன்ற கேள்விகளை தவிர்த்திருக்கலாம். அதேபோல் இயக்குனர் அமீர் பேட்டியில், நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்ற ரீதியில் பருத்திவீரனை மோசமான படம் என்ற விமர்சனத்தையும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மொத்தத்தில் இது வரை அவர் எடுத்துள்ள நேர்கானலில் அவருடைய கேள்விகளுக்கு தயங்காமல் திறமையாக பதில் சொன்னவர் அமீர் மட்டுமே. அந்த வகையில் இந்த வார பூச்செண்டு இயக்குனர் அமீருக்கு. ஏதோ தன்னை ஒரு அறிவு ஜீவி மாதிரி நினைத்துக்கொண்டு பலரிடமும் நேர்கானலில் கேனத்தனமான கேள்விகளை கேட்கும் ஞாநிக்கு இந்த வார குட்டு. சுருக்கமாக, ஞாநி பேசாமல் எழுதினால் மட்டும் போதும்.

நேற்று என் வீட்டு அருகில் உள்ள ஹோட்டலுக்கு சென்றபோது அங்கே இருந்த புக் ஒன்றில் இந்த வாசகத்தை பார்த்தேன்.
"If pro is opposite to con, then what is the opposite progress?
Congress!"
பார்த்தவுடன், இந்த வாசகம் மட்டும் B.J.P கையில் இப்போது கிடைத்தால், வரும் நாடாளுமன்ற தேர்தலில் Congressக்கு எதிராக பயன்படுத்துவார்களோ என்று தோன்றியது.

சிவாஜி, தசாவதாரத்தை போல் இப்போது தயாரிப்பில் இருக்கிற அனைத்து முன்னணி ஹீரோ மற்றும் இயக்குநர்களுடைய படங்களுமே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்துக்கிறது அல்லது ஏற்படுத்தப்படுகிறது. ஹீரோக்களுடைய கெட்-அப் மட்டுமே ரசிகர்களுடைய பல்சை
எகிறவைப்பதற்கு போதுமானதாக இருக்கிறது. சிவாஜியும் தசாவதாரமும் இவ்வளவு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதற்கு காரணம், ரஜினி மற்றும் கமலுடைய வித்தியாசமான கெட்-அப்பில் வந்த புகைப்படம் மட்டுமே. முன்பு கமல் மட்டும் செய்துவந்த விஷயத்தை, இப்போது ஏறக்குறைய எல்லா நடிகர்களுமே செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். என்ன, விக்ரமும் சூர்யாவும் மிகவும் நேர்த்தியுடன் கெட்-அப் மாற்றும் போது தங்களுடைய உடம்பையும் மாற்றுகிறார்கள் மற்றவர்கள் கெட்-அப் பை மட்டும் மாற்றுகிறார்கள். அந்த வகையில் எதிர்பார்ப்பில் உள்ள படங்களாக ரஜினியின் குசேலன், விக்ரமின் கந்தசாமி, சூரியாவின் வாரணம் ஆயிரம், பாலாவின் நான் கடவுள், செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்கள் உள்ளன. என்ன தான் எதிர்பார்ப்பிக்குரிய படமாக இருந்தாலும் கதை சரியில்லை என்றால் ஓடாது என்பதிற்கு பல உதாரணங்கள் இருக்கின்றன. ஆகா இந்த ஹிட் லிஸ்டில் இருக்கும் படங்களில் எத்தனை படங்கள் சிவாஜி ஆகப்போகின்றன எத்தனை படங்கள் பீமா ஆகப்போகின்றன என்பது படம் ரிலீஸ் ஆனால் தெரிந்துவிடும்.

4 comments:

Edwin said...

Yes your view is right. M.K. reduced Doctor's bargaining power.

My views

1. Doctor did so many good things. like 'managl' and private instituions issue.

2.Why doctor not asking anything about central govt. that too a same allaince?

next is

//ஆகா இந்த ஹிட் லிஸ்டில் இருக்கும் படங்களில் எத்தனை படங்கள் சிவாஜி ஆகப்போகின்றன எத்தனை படங்கள் பீமா ஆகப்போகின்றன என்பது படம் ரிலீஸ் ஆனால் தெரிந்துவிடும்//

It should be like below

ஆகா இந்த ஹிட் லிஸ்டில் இருக்கும் படங்களில் எத்தனை படங்கள் தசாவதாரம் ஆகப்போகின்றன எத்தனை படங்கள் பீமா, சிவாஜி ஆகப்போகின்றன என்பது படம் ரிலீஸ் ஆனால் தெரிந்துவிடும். becuse every one knows about Sivaji's commercial failure. so don't hide truth like print or visual media.

குழலி / Kuzhali said...

//பா.ம.கவுக்கு இப்போது அ.தி.மு.கவுடன் கூட்டணி வைப்பதை தவிர வேறு வழியில்லை. ஆனால் ஜெயலலிதா கொடுக்கும் சீட்டை வாங்கியாகனுமே தவிர சென்ற முறையை விட அதிக இடம் வாங்க முடியாது. கலைஞருடைய இந்த மூவ், பா.ம.க வை demanding sideல் இருந்து receiving end க்கு கொண்டுவந்தது என்பது மட்டும் உண்மை.
//
கலைஞருடைய இந்த மூவ், பா.ம.க வை demanding sideல் இருந்து receiving end க்கு கொண்டுவந்தது என்பது மட்டும் உண்மை என்று வைத்துக்கொள்வோம் இதனால் கலைஞருக்கோ திமுகவுக்கோ என்ன நன்மை? இதனால் அதிமுகவுக்கு தானே நன்மை! அதாவது மருத்துவர் இராமதாசு அதிமுக கூட்டணிக்கு குறைந்த இட பேரத்தில் அனுப்பி வைக்கிறாரோ? பாமக கூட்டணியில் இல்லாத போது அது demanding side ஆ இருந்தா என்ன? receiving என்ட் ஆ இருந்தா திமுக வுக்கு என்ன நன்மை....? ஒன்றுமில்லையே.....

சும்மா பாமக ‍திமுக இந்த விடயத்தில் இருக்கும் அரசியலை புரிந்து கொள்ளலாமெனத்தான் கேட்டேன்

நாஞ்சில் பிரதாப் said...

//அரசியல் சாணக்கியன் என்றால் அது கலைஞர் என்பது உலக தமிழர்கள் அறிந்த ஒரு விஷயம். இப்போது பா.ம.கவை கூட்டணியில் இருந்து விலக்கியிருப்பது அவருடைய அரசியல் தந்திரத்திற்கு மேலும் ஒரு எடுத்துக்காட்டு//.

அரசியல் தந்திரம் தான். ஆனால் அதனை கூட்டணியிலிருந்து விலக்குவதற்கு காரணம் தாங்கள் கூறியது மட்டுமல்ல. தி.மு.க.வின் செயல்களை ஆளுங்கட்சியிலிருந்து கொண்டே தைரியமாக விமர்சனம் தெரிவிப்பதால் அது அடுத்த தேர்தலை பாதிப்பை உண்டாக்கும் என்ற அச்சமும் கூட. பிரித்துவிட்டால் மருத்துவரின் விமர்சனங்கள் வெறும் தனிக்கட்சியின் அல்லது எதிர்கட்சியின் விமர்சனங்களாக புஸ்வானம் ஆகிவிடும்.
--------------------

ஆனந்தவிகடனில் ஓ...பக்கங்களை தொடர்ந்து படித்தவன் நான். அவரது பேச்சில் ஒரு அதிமேதாவித்தனம் தெரியும் ஆனால் எழுத்தில் ஒரு பக்குவம் இருக்கும். அவர் தனது பேச்சைக் குறைத்தால் நல்லது என்றுதான் தோன்றுகிறது.
---------------

//சிவாஜி, தசாவதாரத்தை போல் இப்போது தயாரிப்பில் இருக்கிற அனைத்து முன்னணி ஹீரோ மற்றும் இயக்குநர்களுடைய படங்களுமே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்துக்கிறது அல்லது ஏற்படுத்தப்படுகிறது.//

தமிழ் சினிமாவிற்கு ஆரோக்கியமான விசயங்கள் இவை. அந்தகால இயக்குநர் பாலாஜீயின் திரைப்படங்கள் போன்று இப்பவும் படங்களை வருகின்றனவே. அவற்றின் நடுவில் இதுபோன்று படங்கள் ஆறுதல் அளிக்கின்றன. ஒன்றும் வேண்டாம்... பேரரசு, சக்திசிதம்பரம், சரண், புபதி பாண்டியன் போன்ற சில டைரக்டர்களே நாடுகடத்தினாலே தமிழ்சினிமா ஆரோக்கியமாக இருக்கும் என நினைக்கிறேன்.

R A J A said...

@Edwin...
//every one knows about Sivaji's commercial failure. so don't hide truth like print or visual media.
//
I can't accept this Edwin, Sivaji is the boss of the Box-Office. The huge commercial success of Sivaji is the cause for teaming up of Rajni-Shankar again.