Tuesday, June 24, 2008

மிஷ்கின் | நந்தலாலா | அழகிய குயிலே

நந்தலாலா பற்றி மிஷ்கின்...
"இந்த படம் நான் பண்ணுறதுக்கு காரணம், இரண்டு வருஷம் நான் நிறைய கஷ்டப்பட்டேன், நிறைய ஹீரோக்கிட்ட போய் கதை சொல்லி தூக்கி எறியப்பட்ட ஒரு கதை. ஒரு ஹீரோ பையனை வைத்து 45 நாள் train பண்ணி, எல்லாமே readyயாகி, இளையராஜா கிட்ட போய் பாடல் கம்போஸ் பண்ணி, ஷூட்டிங் போறப்ப கிழ விழுந்து டிராப் பண்ணுன படம். இப்ப எனக்கு நிறைய offer வந்துருக்கு, அஞ்சாதே வெற்றிக்கு பிறகு நிறைய producer's வந்து பேசுனாங்க, இப்ப நான் அந்த side போயிட்டு பண்ணுனா, என் வாழ்க்கைக்கு ரொம்ப நல்லது, இந்த growth fastடா இருக்கும், என்னுடைய economic growth fastடா இருக்கும், ஆனா நந்தலாலா ஒரு மூலையில கிடக்கும். நான் ஒரு பெரிய்ய ஹீரோவுக்கு படம் பண்ணி win பண்ணுன பிறகு நந்தலாலாவை திரும்பி என்னால பார்க்கவே முடியாது. அதுக்கப்புறம் ஒரு நாள் வந்து, என்கிட்டே அழகான ஒரு கதை இருந்துச்சு நான் வந்து அதை மிஸ் பண்ணிட்டேனு வாழ்நாள் பூரா சொல்லிக்கிட்டு இருக்குறத பெரிய போலித்தனம்னு நினைக்கிறேன்."
கடைசி மூணு வரிய கொஞ்சம் நல்ல படுசுப்பாருங்க, மறைமுகமா யார சொல்லுறாருன்னு புரியுதா? எனக்கு புரியுது. புரியாதவுங்க திரும்ப ஒரு தடவ இந்த பதிவோட தலைப்பை பார்க்கவும்.

3 comments:

யாத்திரீகன் said...

awesome answer.. he speaks from his heart :-) , i wish him success in all his endowers ..

மதுசூதனன் said...

இயக்குனர் சங்கரை பத்திதானே

R A J A said...

@ யாத்திரீகன் said...
// i wish him success in all his endowers ..//
Me too

@மதுசூதனன் said...
//இயக்குனர் சங்கரை பத்திதானே//
:-)