Friday, July 04, 2008

வி மிஸ் யு ரகுவரன்

குடி, போதை, விவாகரத்து எல்லாவற்றையும் தவிர்த்து ஒரு நடிகராக இவர் மீது எனக்கொரு அலாதிப் ப்ரியம் எப்போதும் உண்டு. தொடர்ந்து படங்கள் நடிக்காத போதும், தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தையும் தமிழ் திரையுலகில் ஒரு தனி இடத்தையும் ஏற்படுத்திக்கொண்டவர். மக்களால் அதிகம் ரசிக்கப்பட்ட ஒரு தமிழ் வில்லன் நிச்சயம் இவராகத்தான் இருப்பார். பெரிதாக அலடிக்கொல்லாமல் இயல்பான நடிப்பே இவரது ப்ளஸ். இன்றைக்கும் ரஜினிக்கு ஏற்ற ஒரு பவர்புல் வில்லன் ரகுவரன்தான். குணசித்திரம், வில்லன் என எல்லாவற்றிற்கும் பொருந்தும் ஒரு அருமையான முகம். ஹீரோக்களை தவிர்த்து மற்ற நடிகர்கள் தங்கள் வயதிற்கேற்ற கதாபாத்திரங்களையே தேர்ந்தெடுப்பார்கள் அல்லது கிடைக்கும். இதற்க்கு ஒரே விதிவிலக்கு ரகுவரன்தான். ஒரே காலகட்டத்தில் ஒரே நடிகருக்கு சமவயதுள்ள தோழனாக, அண்ணனாக, அப்பாவாக நடித்திருப்பார். 'நிலாவே வா' படத்தில் விஜயின் வயதை ஒட்டிய கதாபாத்திரத்தில் வருவார், 'நேருக்கு நேர்' படத்தில் விஜயின் அண்ணனாக வருவார், 'செல்வா' படத்தில் விஜயின் அப்பாவாக நடித்திருப்பார். ஒரே நேரத்தில் இப்படி நடிப்பதை மக்கள் அவ்வளவு எளிதாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.


நடிகர்களுக்கு வாய்ஸ் மாடுலேஷுன் ரொம்ப முக்கியம், இவருக்கு அது இயற்கையாகவே அமைந்துபோனது வரம். இதற்க்கு சிறந்த உதாரணம் 'புரியாத புதிர்' படத்தில் இவர் சொல்லும் 'I know....I know'. அண்ணா நகர் முதல் தெரு, அஞ்சலி, செல்வா, ஆஹா, பாட்ஷா, முதல்வன், அமர்களம், ரன், போன்ற படங்களை பார்க்கும் போது, எவ்வளவு அழகான நடிகரை நாம் இழந்திருக்கிறோம் என்பது புரிகிறது. கொஞ்சம் சுதாரிப்பாக வாழ்ந்திருந்தால் இன்னும் பல உயரங்களை தொட்டிருக்கக்கூடியவர்......இப்போது வரும் பல படங்களில் உள்ள சில கேரக்டர்களை பார்க்கும் போது, இதெல்லாம் ரகுவரனிடம் கொடுத்திருந்தால் கலக்கியிருப்பார் என்று தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை. வி மிஸ் யு எ லாட் மேன்.

2 comments:

சின்ன அம்மிணி said...

மக்கள் என் பக்கம் தான் நான் பார்த்த முதல் ரகுவரன் படம்னு நினைக்கிறேன். சத்யராஜ், நிழல்கள் ரவியோட அருமையா நடிச்சிருப்பார். கெட்ட பழக்கங்களை விடமுடியாமல் கஷ்டப்பட்டவர் பாவம்.

R A J A said...

@சின்ன அம்மிணி,
எனக்கு கூட ரொம்ப புடுச்ச படம் 'மக்கள் என் பக்கம்'. எல்லோருமே ரொம்ப நல்லா நடிச்சிருப்பாங்க