Saturday, July 19, 2008

சென்னையில் கால் ஆட்டோ (ஷேர் ஆட்டோ அல்ல)

சென்னையில் கால் டாக்ஸி போல் இப்போது கால் ஆட்டோ அறிமுகமாகி உள்ளது. கேட்ஸ் இந்தியா என்கின்றன நிறுவனத்தின் கீழ் பல ஆடோக்கள் சென்னை முழுவதும் கடந்த மூன்று மாதங்களாக இயங்குகின்றதாம். ஆட்டோ கட்டணம் கிலோ மீட்டருக்கு ரூ. 6 + கால் சென்டர் கட்டணம். கேட்ஸ் இந்தியாவின் விஷேசம், ஆட்டோ உங்கள் இடத்திற்கு வந்த பிறகே மீட்டர் போடப்படும். மீட்டர் சரியாக இருக்கும் என்பதற்கு கேட்ஸ் இந்தியா உத்தரவாதம். போன் செய்தால் போதும் உங்கள் இடத்திற்கே ஆட்டோ வரும்.
இவர்களுடைய முகவரி
Gates India
104, Rajagopalan Street,
Valasaravakkam,
Chennai 600087.
mail: gatesindia@gmail.com
ஆட்டோ ஷேரிங் என்கின்றன திட்டமும் இவர்களிடம் உண்டு. அதாவது இந்த திட்டத்தின் கீழ் ஒரு ஆடோவுக்கு மூன்று நபர் மட்டுமே அனுமதி. கிலோ மீட்டருக்கு அதே 6 ரூபாய் (மூவரும் பிரிதுக்கொள்ளலாமா என்று சரியாக தெரியவில்லை). அலுவலகம் செல்பவராக இருந்தால் அலுவலகம் செல்லவேண்டிய நேரம், எங்கிருந்து எங்கு செல்கின்றிர்கள் என்ற விபரத்தை 4344 4344 என்கின்றன எண்ணுக்கு தொடர்புகொண்டு பதிவு செய்துகொள்ளுங்கள். தினமும் நிம்மதியாக சென்று வரலாம். இந்த திட்டம் வெற்றி பெற்றால், ஒரு நிறுவனத்தின் கீழ் அனைத்து ஆடோகளும் இயங்குவதால் ஆட்டோ ஓட்டுனரிடம் ஒரு profesionalism இருக்கும் என்று நம்பலாம். மீட்டருக்கு சூடு வைக்கும் கள்ளத்தனம் இருக்காது, பேரம் பேசுவது, சண்டை போடுவது போன்றவற்றிற்கு இடம் இருக்காது. மின்மடல்லில் என் நண்பர் சதீஷ் அனுப்பிய செய்தியே இது, நான் இன்னும் பயணம் செய்து பார்க்கவில்லை. பயணம் செய்தவர்கள் தங்களுடைய அனுபவத்தை பகிர்ந்துகொண்டால் மற்றவர்களுக்கு உபயோகமாக இருக்கும்.

2 comments:

Anonymous said...

Real Good news.. This will help to tackle the criminals who drive autos and rape innocent victims. But i am sure police will create lot of troubles for this share autos, cz most of the regular autos owned by the chennai police only.

R A J A said...

@ Anonymous,
//But i am sure police will create lot of troubles for this share autos, cz most of the regular autos owned by the chennai police only.
//

I agree with u....