Monday, August 04, 2008

ஆயுதம் செய்வோம் - திரை விமர்சனம்

1980களில் வந்திருந்தால் ஒரு வேலை மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்திருக்கலாம். இன்றைய சூழலில் ஒரு படம் வெற்றிப்படமாக அமையவேண்டுமானால் ஒன்று அதிநவீன டெக்னிகல் சமாச்சாரங்களுடன் நேர்த்தியான முறையில் வரவேண்டும். அல்லது, யதார்த்தத்தை மீறாமல் ரத்தமும் சதையுமாக சொல்லவேண்டும். சில இயக்குனர்கள் இந்த இரண்டு வகையிலும் சேராமல் ஒரு நாடகத் தன்மையோடு இயக்கிவிடுவதுண்டு, அப்படி வந்த படம் தான் 'ஆயுதம் செய்வோம்'.

காந்தியிசம் என்று சொல்லக்கூடிய அகிம்சையை மையமாக வைத்து கத்தியின்றி ரத்தமின்றிய யுத்தமே நல்ல தீர்வை தரும் என்று சொல்லியிருக்கீறார்கள். ஹீரோவை உயர்வாக காட்டவேண்டுமென்றால் வில்லனை கொடூரமாக சித்தரிக்கும் சராசரி தமிழ் சினிமாவைப்போல், அகிம்சையை உயர்திப்பிடிப்பதற்க்காக வன்முறையை அதிகமாக காட்டியிருக்கீறார்கள். கூடவே இரட்டை அர்த்த வசனம் வேறு. காந்தி மியூசியத்தில் கூட்டத்தை வரவழைப்பதற்கு, மாளவிகாவை வைத்து விளம்பரம் செய்வது மிகவும் அபத்தம். இந்த அபத்தமான காட்சியையும் வசனத்தின் மூலம் சரி என்று சொல்லியிருப்பது இயக்குனரின் திறமையே. அந்த வசனத்தின் ஒரு பகுதி.....


......காந்திய பத்தி நீங்க சொன்னா என்ன, நான் சொன்ன என்ன, அந்த நடிகைதான் சொன்ன என்ன, நல்ல விதையை யார் விதைத்தாலும் நல்ல செடிதான் தாத்தா முளைக்கும். யார் விதைச்சாங்குறது முக்கியமில்ல எத விதைசோங்குறதுதான் முக்கியம்......கடவுளே தெருவுல ஊர்வலம் போகும்போது சப்பரத்துக்கு எதிர்த்தாப்புல கவர்ச்சியா கரகாட்டம் வானவேடிக்கையின்னு வச்சாத்தான் நாலு பேரு வீட்டுக்குள்ள இருந்து வெளிய வந்து வேடிக்கை பாக்குறாங்க, சைலெண்ட்டா போச்சுன்னு வையுங்க சாமி வந்துட்டு போனது யாருக்குமே தெரியாம போயிரும். கடவுளுக்கே பப்ளிசிட்டி தேவைப்படும் போது அதுக்கு equalலா வச்சு கும்புடுற காந்தி தாதாவுக்கு பப்ளிசிட்டி தேவைப்படாத......காந்திய பத்தி எல்லோரும் தெருஞ்சுக்கணும் தான் அவர் படத்தை ரூபா நோட்டுல அச்சு அடுச்சிருக்காங்க. லஞ்சம் வாங்குறவனும் அந்த ரூபாயைத்தான் லஞ்சமா வாங்குறான், அநாதை
இல்லத்திற்கு நன்கொடை குடுக்குறவனும் அதே ரூபாயத்தான் கொடுக்குறான். ...


இந்த வசனத்தை தவிர படத்தில் ஒன்னும் சரியில்லை. வன்முறையை விட்டு ஹீரோ அகிம்சைக்கு மனம் மாறும் காட்சியை இன்னும் யதார்த்தமாக எடுத்திருக்கலாம். மணிவண்ணன், விஜயகுமார், நெப்போலியன், நாசர், சுகன்யா என்று ஒரு கூட்டம் இருந்தாலும் விஜயகுமாரை தவிர எந்த கதாபாத்திரமும் அழுத்தமாக இல்லை. குறிப்பாக என்கவுண்டர் எழுமலையாக வரும் நெப்போலியன் சுத்த வேஸ்ட்.


இப்படித்தான் வாழ வேண்டும் என்று சொன்ன காந்தியின் கொள்கையை, எப்படி சொன்னால் என்ன காந்தியின் கொள்கையைதானே சொல்லுகிறோம் என்று எடுத்திருக்கிறார்கள். குத்துப்பாட்டு, இரட்டை அர்த்த வசனங்கள் போன்றவற்றையும், மாளவிகா, விந்தியா போன்றவர்களையும் தவிர்த்து எடுத்திருந்தால் காந்தியிசத்தை இன்னும் மென்மையாக சொல்லியிருக்கலாம்.


கொசுறு: இன்றைய தேதியில் B & C சென்டரில் நன்றாக ஓடும் படங்கள் சுந்தர்.சி படங்கள்தானாம். இவர் படத்திற்கு மினிமம் கியாரண்டி உண்டாம். இந்த படத்திற்குப் பிறகு அவருடைய சம்பளம் 60 லட்சத்தில் இருந்து ஒன்னேகால் கோடியாக உயர்ந்திருக்கிறதாம்.

No comments: