Monday, August 18, 2008

அரங்கேற்ற வேளை

எல்லோருக்குமே காலேஜ் என்றாலே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தான். அதிலும் cultural programs, sports, symposium என்று எல்லாம் ஒன்றாக வந்தால் க்ளாஸ்சுக்கே போகவேண்டியதில்லை, எல்லாமே O.D தான். எங்க காலேஜ்ல வைகோ தலைமையில ஒரு program நடந்துச்சு. பாக்கியராஜ், விவேக், தினேஷ் மூவரும் என்னுடைய ரூம்மெட். நம்மளும் ஏதாவது ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாமே என்று கூடிப் பேசி நாடகம் ஒன்று போடலாம் என்று முடிவு செய்தோம். எங்க காலேஜ்ல நாடகம், மியுசிக், மிம்மிக்கிரி போன்றவற்றின் பிதாமகன் தான் Sam. Sam தயவினால் இரெண்டே நாளில் கதை ரெடி. கிட்டத்தட்ட 10 கேரக்டர்கள். யார் யார் எந்தெந்த கேரக்டர் செய்வது என்று discussionனில் உட்கார்ந்து வெகுநேரத்துக்குப் பிறகு, முக்கிய கேரக்டர்களை எங்கள் ரூமில் உள்ள நால்வரும் செய்வது எனவும், இரண்டு கேரக்டர்களை பக்கத்து ரூம்மெட் ஆனா விஜய்யும், என் பெஞ்ச் மெட்டான ராஜகோபால் செய்வதெனவும், மீதமிருந்த கேரக்டர்களை ஷங்கர்லால், துளசி மற்றும் ஜுனியர்கள் செய்வதென முடிவானது. இதற்குப் பிறகு எந்தெந்த நபர் என்ன பேசவேண்டும், எப்படி நடிக்க வேண்டும், நாடகத்தின் பெயர் எல்லாமே Samமுடைய பொறுப்பு, காரணம் அவர் தான டைரக்டர் (இப்படி சொல்லித்தான் அவர கவுத்தோம்).
இப்போது நாடகத்தின் பெயர், ஸ்கிரிப்ட், டயலாக் போன்ற பேப்பர் வொர்க் எல்லாம் ரெடி. ட்ராமா ரிகர்சல் என்று சொல்லி H.O.D யிடம் மொத்தமாக நான்கு நாள் O.D வாங்கினோம். ஆனால் ரிகர்சல் என்ற பெயரில் நடந்தவை எல்லாமே கூத்துக்கள்தான். Sam பொறுப்பாக ஒவொரு கேரக்டர்கள் பேசவேண்டிய வசனங்களையும் தனி தனி பேப்பரில் எழுதி அவரவரிடம் கொடுத்தார். ரிகர்சலில், தினேஷ்க்கு எப்படி நடிக்கவேண்டும் எப்படி உச்சரிக்கவேண்டும் என்று Sam சொல்லிக் கொடுத்துக்கொண்டிருந்தார். பாக்கியராஜ் அவனை 'மாமி மாமி' என்று கிண்டல் அடித்துக்கொண்டிருந்தான். அப்படி கூப்பிட்டால்தான் அவன் அந்த கேரக்டர் ஆகவே மாறி நடிக்க முடியும், எல்லாம் ஒரு இன்வால்மெண்டுக்குதான் என்று சொன்னான். கடைசியில் மொத்த ட்ராமா ட்ரூப்பும் அவனை 'மாமி மாமி' என்றழைக்க, கடுப்பான தினேஷ், "போங்கடா நீங்களும் உங்க டிராமாவும்" என்று கோவத்தோடு கத்திவிட்டு வெளியே சென்றுவிட்டான். எவ்வளவு சமாதானம் செய்தும் மீண்டும் நடிக்க மறுத்துவிட்டான். ஒரு வகையில் அவன் செய்ததும் சரியே. ஆகா முதல் நாள் ரிகர்சல் முடிவில் உருப்படியாக எதுவும் நடக்கவில்லை.
தினேஷ் விட்டுச் சென்ற அந்த கேரக்டர்ருக்கு யாரைப்போடுவது என யோசிக்க ஆரம்பித்தோம். மீண்டும் ஆள் பிடிக்கும் படலம் ஆரம்பம் ஆனது. மாமி கேரக்டர் என்பதால் யாரும் சம்மதிக்கவில்லை. அடுத்த நாள் காலையில் ரிகர்சலுக்கு சென்றால் அங்கே மாமி கேரக்டர் வசனத்தை விவேக் பேசிக்கொண்டிருந்தான். "யாருமே கிடைக்கல அதுனால விவேக்க நடிக்க வச்சுட்டேன். அவனும் சரின்னு சொல்லிட்டான்" என்றார் Sam. அப்ப விவேக்கோட கேரக்டர் என்று கேட்க......"அதை சாகடிச்சாச்சு" என்றார். அடப்பாவிகளா overnightல ஒரு கேரக்டர்ஐயே க்ளோஸ் பண்ணீட்டீங்களே என்று நினைத்தேன். முதல் நாள் போல் இல்லாமல் சீரியஸ் ஆகவே ரிகர்சல் நடந்தது. ஓரளவுக்கு எல்லாம் ok ஆனா நிலையில், திடீர் என managementல் இருந்து 5 lecturer கொண்ட குழு ஒன்று ஏற்படுத்தி இருப்பதாகவும் அவர்கள் அனைத்து programமையும் பார்த்து நன்றாக இருப்பதை மட்டுமே மேடை ஏற அனுமதிப்பார்கள் என்று ஒரு தகவல் வந்தது. டான்ஸ் programல் பல பேர் கலந்துகொண்டதால், அனைவரையும் அனுமதிக்க முடியாததால் shortlist செய்வதற்குத்தான் இந்த குழு. நல்ல வேளையாக வேறு யாரும் நாடகம் போடாததால் வேறு வழியின்றி எங்களுடைய நாடகம் 23.02.2002 அன்று மேடையேறியது.

பி.கு: காலேஜ் முடிஞ்சு 5 வருஷம் ஆகுது. நாடகத்தோட பேரு, கதை, கேரக்டர்கள் பெயர் என்று எதுவுமே இப்போது நியாபகத்தில் இல்லை. அரங்கேற்ற வேளை படத்தில் வரும் 'சக்திநாதன் நாடக சபா' மாதிரி பேரு கூட வச்சோம், ஆனா கால வெள்ளத்தில் எல்லாமே மறந்து போச்சு. மழை நின்ற பிறகு தெளிவாய் தெரியும் வானத்தைப்போல் சில விஷயங்கள் மட்டும் நீங்காத நினைவுகளாக எஞ்சி இருக்கின்றன.
Photos:
1. நாடகத்தின் ஒரு காட்சி
2. Director Sam
3&4. Drama Troop

KEYWORDS: P.S.R.ENGINEERING COLLEGE, SIVAKASI, PSREC.

No comments: