Tuesday, December 09, 2008

ஷங்கர் | எந்திரன் | கில் பில்

சில மாதங்களுக்கு முன் Kill Bill என்றொரு படம் பார்த்தேன். படம் ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை ரத்தம் ரத்தம் ரத்தம், அப்படி ஒரு முழுநீள action படம். ஒரு பெண் பழிவாங்கும் கதை. படத்தின் இடையில் ஒரு 20 நிமிடம் கதை கார்ட்டூனில் நகரும். கார்ட்டூன் வடிவத்திலேயே பல உச்சகட்ட வன்முறை காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கும். கார்ட்டூனாய் காட்டாமல் காட்சிகளாக காட்டியிருந்தால் படத்தை வெளியிட தடை விதித்திருந்தாலும் ஆச்சரியப்படுவதர்க்கில்லை. அப்படியொரு ரணகளம். இந்த கார்ட்டூன் யுக்தியைதான் கமல் ஆளவந்தான் படத்தில் சிறிய அளவில் பயன்படுத்தியிருப்பார். இந்த படத்தின் Stunt choreographerஆன Yuen Woo Pingகைத்தான் ஷங்கர் தற்ப்போது தான் இயக்கும் எந்திரன் படத்தின் டீமில் சேர்த்திருக்கிறார். அந்நியன், சிவாஜி என்று தன் கடைசி இரண்டு படத்திலும் action காட்சிகள் ரொம்பவே வித்தியாசமாக தந்த ஷங்கர், அதைக்காட்டிலும் எந்திரன் படத்தில் மிரட்டலாக தருவார் என்று அடித்துச் சொல்லலாம். இதோ Kill Bill படத்தில் இருந்து Yuen Woo Ping இயக்கிய ஒரு சண்டைக்காட்சி. குறிப்பாக சண்டைக்காட்சியின் ஆரம்பத்தில் வரும் பின்னணி இசையையும் சேர்த்து கவனிக்கவும்.


எனக்கென்னவோ ஷங்கரின் வெற்றிக்கு அவர் கைகோர்க்கும் எக்ஸ்சலென்ட் டெக்னிசியன்கள் தான் முக்கிய காரணம் என்று எப்போதுமே தோன்றும்.

1 comment:

Chuttiarun said...

வணக்கம்

நாங்கள் தமிழ் ஸ்டுடியோ.காம் எனும் குறும்படங்களுக்கான இணைய தளம் ஒன்றை நடத்தி வருகிறோம். எங்களுக்கு உங்கள் ப்ளாகில் ஒரு இணைப்பு தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். எங்கள் தளத்தியா பாருங்கள் பயனுள்ளவை எனக் கருதினால் இணைப்பு கொடுங்கள்.
http://www.thamizhstudio.com/
Add a Gadget - ல் இதை பயன்படுத்துக
வழி --> Add a Gadget --> select HTML/JavaScript
Title : தமிழ் ஸ்டுடியோ.காம்
Content : img alt="தமிழ் ஸ்டுடியோ.காம்" src="http://thamizhstudio.com/images/home_stud_logo.jpg"/>