Wednesday, December 03, 2008

கடந்துபோன காற்று

கடந்த கால நட்புக்களை சற்றே திரும்பிப்பார்க்கிறேன், முறிந்து போன சில உறவுகளை பற்றி நினைத்துப் பார்க்கிறேன், முரண்பாடுகளால் முறிந்துபோனதைவிட, அதிக அன்பால் முறிந்துபோனதே அதிகமாக தெரிகிறது. எவ்வளவுதான் ஆழமான நட்பாக இருந்தாலும் அங்கேயும் சில விஷயங்கள் உரிமை மீறலாகவே கருதப்படுகிறது. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது நன்றாக இப்பொழுது புரிகிறது. முறிந்துபோய்விட்டது என்று சொன்னாலும் அவை இன்றும் இதயத்தில் ஒரு சுகமான சுமையாகவே இருக்கிறது. கற்காலத்தில் இருந்தால் கூட தொடர்புகொள்ள முடியாத நிலை என்று நம்மை நாமே சமாதானம் செய்து கொள்ளலாம். இன்றைக்கு அதற்குக் கூட வழியில்லை. இன்டர்நெட்டும் , ஈ மையிலும், எஸ்.எம்.எஸ்சும் இருந்தும் தொடர்பு கொள்ளவிரும்பாத ஒரு தேக்கநிலை ரொம்பவே பாதிக்கிறது. முள்ளை முள்ளால் எடுப்பது போல் நட்பினால் ஏற்ப்பட்ட இந்த சுமையை கூட சில நண்பர்கள்தான் போக்குகிறார்கள்.

No comments: