Sunday, December 14, 2008

வாரணம் ஆயிரம் - எக்சலென்ட்

குழந்தையாக இருக்கும் கதாநாயகன் ஒரே பாடலில் வளர்ந்து இளைஞனாவதை பார்த்து பழக்கப்பட்ட நமக்கு, ஒரு சிறு மனமாற்றத்தைக்கூட 10 நிமிட காட்சியாக காட்டும்போது "படம் ரொம்ப ஸ்லோ" என்ற கமெண்ட் வருவது இயற்கையே. ஆனால் அந்த 'ஸ்லோ' தான் இந்த படத்திற்கு ஒரு கிளாசிகல் டச் தருகிறது. மொத்த டெக்னிசியன்களின் உழைப்பும் ஒவ்வொரு காட்சியிலும் அப்படியே தெரிகிறது.
சூர்யா இந்த கதைக்காக ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார். சினிமா ஹீரோக்களை role modelஆகா நினைக்கும் 15 வயதில், தன் அப்பாவை கதாநாயகனாக பார்க்கும் ஒரு மகனின் நினைவலைகள்தான் வாரணம் ஆயிரம். டிப்பிகல் மிடில் கிளாஸ் குடும்பத்தில் பிள்ளைகளை பார்த்து பார்த்து வளர்க்கும் போது இது போன்ற உணர்வுகள் பிள்ளையின் மனதில் உருவாவது இயல்பானதே. படம் ரொம்ப ஸ்லோ, அதிகமாக ஆங்கில வசனங்கள், தேவையில்லாத கிட்நாப் காட்சி என்று படித்த எல்லா விமர்சனங்களும் படம் பார்த்த போது பொய்யாய் போனது. எந்த இடத்திலும் எந்த காட்சியும் துளி கூட எனக்கு உருத்தவுமில்லை போர் அடிக்கவுமில்லை. எக்சலென்ட் பிலிம்.

No comments: