Thursday, January 15, 2009

ஒரு நிமிட விமர்சனம்

பொம்மலாட்டம்: நல்ல த்ரில்லர் படம். நானா படேகருக்கு பதில் மம்மூட்டியை போட்டு தமிழ்/மலையாளத்தில் ரிலீஸ் செய்திருந்தால் இன்னும் மிகப் பெரிய வெற்றி பெற்றிருக்கும். ஹிந்தியில் தற்போது எவ்வளவு பெரிய வெற்றி அடையும் என்று தெரியவில்லை ஆனால் மம்மூட்டி நடித்திருந்தால் மலையாளத்தில் இந்த படத்தை கொண்டாடியிருப்பார்கள் என்பது உண்மை. நானே படேகருக்கு நிழல்கள் ரவியின் குரல் அற்புதமாய் பொருந்தியிருப்பது படத்திற்கு மிகப் பெரிய பிளஸ்.


வாரணம் ஆயிரம் - a perfect autobiography. படம் ரொம்ப ஸ்லொ என்று பரவலாக சொல்லப்படுகிறது, பயோகிராபி என்று வந்துவிட்டாலே, மெதுவாக சொன்னால்தான் கதையோடு பயணிக்கிற ஒரு அனுபவம் கிட்டும். அருமையான படம். சூரியா ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார். ரீனா, ஆராதனா, மாயா வரிசையில், இந்தப் படத்தில் ஹீரோயின் பெயர் மேக்னா. எங்கிருந்தது தான் இப்படி அழகான பெயர்(பிகர்)களை கௌதம் பிடிக்கிறாரோ.

திண்டுக்கல் சாரதி: சன் டி.வியின் தொடர் விளம்பரத்தால், சுமாரான படம் சூப்பர் படமாக மாறியிருக்கிறது. பெரிதாக எந்த குறையுமில்லை. நல்ல கதை, அதற்கேற்ற ஆர்டிஸ்ட். வடிவேலுவுக்கு ஒரு புலிக்கேசி போல் கருணாசுக்கு சாரதி. விவேக்குடைய 'சொல்லி அடிப்பேன்' தான் எப்போது வரும்முன்னு தெரியல.

திருவண்ணாமலை: ஏழுமலை, மருதமலை வரிசையில் அர்ஜுனுக்கு வந்துள்ள படம் திருவண்ணாமலை. இரட்டை வேடத்தில் அர்ஜுன். செகண்ட் ஹீரோவாக பேரரசு!. அர்ஜுனைக் காட்டிலும் பேரரசுவுக்கே அதிக பஞ்ச் வசனங்கள். வில்லன்கள் அனைவரும் அருமையாக கத்துகிறார்கள். பாதி படத்திற்கு மேல் செம்ம போர். எப்போது படம் முடியுமென்று தோன ஆரம்பித்துவிட்டது. பேரரசுவின் அடுத்த படம் திருத்தணி, பரத் ஹீரோவாம், போதுமடா சாமி.

சிலம்பாட்டம் : கதை பழசாக இருந்தாலும், போர் அடிக்காமல் போகிறது. இரட்டை வேடத்தில் சிம்பு. ஐயர் வேடம் பொருந்தாமல் போனாலும், கிராமத்து கேரக்டர் 'தமிழரசு' ரொம்ப நல்லா பொருந்தியிருக்கு. யுவனின் இசை, action, செண்டிமெண்ட், சந்தானம் காமெடி, பில்லா கெட்- அப், சானாகான் கிளாமர், சினேகா மாமி என சிலம்பாட்டம் எல்லாம் கலந்த காக்டெயில்.

கொம்பு: கரண், விந்தியா நடித்திருக்கும் படம் (எப்போ வந்ததுனு எல்லாம் என்னைக் கேக்கக் கூடாது). வில்லன் தன்னுடைய பால் பண்ணை வியாபாரம் நன்றாக நடக்க வேண்டும் என்பதற்காக விந்தியாவின் பால் பண்ணையில் பல குழப்பங்களை விளைவிப்பார். வில்லனின் சதியை முறியடித்து பால் பண்ணையை வெற்றிகரமாக நடத்த வித்தியாவிற்கு கரண் உதவுவர். பிளாஷ்பேக்கில் கரண் மும்பையை கலக்கிய தாதாவம். இப்படி போகுது கதை. ஒரு அ(பி)ட்டு படம் பார்த்த எபெக்ட்.

5 comments:

நிலா பிரியன் said...

Focus Lanka திரச்சியிலும் இணைந்து கொள்ளுங்கள்.
http://www.focuslanka.com

வண்ணத்துபூச்சியார் said...

இந்த படங்களுக்கு வரி விமர்சனம் போதும் என நினைத்தது மிகச்சரி.

பொம்மலாட்டம் தவிர எல்லாமே சுமார் ரகம் தான்.

சன் டிவி வெளியீடுகள் குப்பைகள்.

வாழ்த்துக்கள்.. தொடரட்டும் பணி.

சினிமா பற்றிய எனது வலை பார்க்கவும்.

நிறை / குறை சொல்லவும்.

கீழை ராஸா said...

குறள் விமர்சனம்...

Cable Sankar said...

சார்.. உங்கள் சில வரி விமர்சனங்கள் அருமை.. அது சரி கலிபோர்னியாவில் இருந்து கொண்டு எல்லா படங்களையும் அதிலேயும் கொம்பை கூட விடாமல் பார்த்த உங்கள் சினிமா ஆர்வம் என்னை ஆச்சர்யபடுத்துகிறது. கண்டிப்பாய் சினிமாவுக்கு வர வேண்டியவர் தான் நீங்கள்.

Nilofer Anbarasu said...

@ வண்ணத்துபூச்சியார் ...
நன்றி :)

@ கீழை ராஸா ...
உங்கள் மறுமொழியை பார்த்தவுடன் "அட இதையே தலைப்பாக வைத்திருக்கலாமே" என்று தான் தோன்றியது. இரண்டடி விமர்சனத்துக்கு இரண்டு வார்த்தையில் மறுமொழி :) ரொம்பவே ரசித்தேன்.

@ Cable Sankar ...
//கண்டிப்பாய் சினிமாவுக்கு வர வேண்டியவர் தான் நீங்கள்.//
அதைத்தான் நானும் அடிக்கடி நினைத்துக்கொள்வேன்.