Wednesday, January 14, 2009

கலிபோர்னியாவில் பிள்ளையார் நோன்பு

நகரத்தார்களின் தனித்தன்மையைக் காட்டும் விழாக்களுள் ஒன்று பிள்ளையார் நோன்பு, இதில் 'இழை எடுத்துக்கொள்ளுதல்' என்பது ஒரு விஷேசமான ஒன்று. குடும்பத்தில் ஒவொருவருக்கும் ஒரு மாவிளக்கு எரிகின்ற இழையுடன் வழங்கப்படும், அதை அவர்கள் வாங்கி சுடர் அணையாமல் அப்படியே வாயில் போட்டுக்கொள்வார்கள். "ஒளி வடிவமான இறைவனை நமக்குள்ளே எழுந்தருளச் செய்யும் செயல்" என இதை நம்பினர். இந்த வருடம் எனக்கு கலிபோர்னியாவில் இழை எடுத்துக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது விநாயகரின் விருப்பமே, அது இன்னும் சில ஆண்டுகளாவது தொடரவேண்டும் என்பது என்னுடைய வேண்டுதலே. இந்த முறை Livermoreல் உள்ள சிவா விஷ்ணு கோவிலில் விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்த விழாவில் பங்கெடுத்துக்கொள்ள முன்பே ஈ-மெயில் மூலம் register செய்திருக்கவேண்டும், நான் செய்யவில்லை, அங்கே போய் spotடில் register செய்தேன். இழை எடுத்துக்கொள்ள ஒரு புள்ளிக்கு 20$ என நிர்னைத்திருந்தாகள். பெயர்கள் வாசிக்க வாசிக்க, வரிசையில் நின்று, மேடையில் இருந்த பெரியவர்களை வணங்கி அனைவரும் மாவிளக்கை பெற்றுக்கொண்டோம். பின்னர் உப்பு-5, கல்க்கண்டு-4, பேரிச்சம்பலம்-2, மஞ்சள்-3, குங்குமம்-4, குழந்தைகள் டிரஸ் -2செட் , பழம்-2 ஏலம் விடப்பட்டது. வழக்கம்போல் உப்பு அதிக விலைக்கு (1001$) போனது. விழாவில் "பிள்ளையார் நோன்பு மலர்" வெளியிடப்பட்டது. மொத்தம் 192 குடும்பங்கள் பே ஏரியாவில் (Bay Area) வசிக்கிறார்கள். இந்த குடும்பங்கள் எந்தெந்த கோவிலை சேர்ந்தவர்கள் என்ற புள்ளிவிபரம் கீழே.

இளையாத்தன்குடி - 43
மாத்தூர் - 38
வைரவன் கோவில் - 32
இரணி கோவில் - 21
பிள்ளையார்பட்டி - 19
இலுப்பக்குடி - 15
சூரக்குடி - 9
NA - 9
நேமம் கோவில் - 6
வேலங்குடி - 0
மொத்தம் 192

இட்லி, வடை,கந்தர்ப்பம், பால்கோவா, பொங்கல், சாம்பார், சட்னி போன்றவற்றை பலரும் செய்து கொண்டுவர, பறிமாறப்பட்டது. மேலும் விபரங்கள் இங்கே

No comments: