Monday, February 02, 2009

குட்டி விமர்சனம்

மகேஷ் சரண்யா மற்றும் பலர்: கிளைமாக்ஸ்ஐ மட்டுமே நம்பி படம் எடுத்திருக்கிறார் இயக்குனர். கிளைமாக்ஸ் அவ்வளவு சுவாரஸ்யமில்லாமல் போனாலும் மட்டமாக இல்லை. படத்தில் சந்தியாவினுடைய முடிவு யாரும் எதிர்பார்க்காத ஒரு திருப்பம். தன் வீட்டில் உள்ள ஒவ்வொருவரிடமும் தன் காதலை பற்றி சக்தி சொல்வது ரொம்ப அழகு. ரொம்ப போர் அடிக்கும் போது இந்த படத்தை பார்க்கலாம்.

வில்லு: Bond பட ஸ்டைலில் எடுத்திருப்பதாக பிரபுதேவா ஒரு பேட்டியில் சொல்லியிருந்த்தார். James Bondஐ யாரும் இந்த அளவுக்கு கேவலப்படுத்த முடியாது என்பது படத்தை பார்த்த பிறகுதான் தெரிந்தது. ஏகப்பட்ட காட்சிகள் சற்று புதுமையாக தெரிந்தாலும், அவை அனைத்தும் தெலுங்கு படங்களில் இருந்து காப்பியடித்தது என குல்டி நண்பர்கள் சொன்னார்கள். படம் பார்த்துவிட்டு வெளியே வரும்போது, நயன்தாரா நடித்திருந்தால் குருவி கூட ஓடியிருக்குமோ என்று தோன்றியது.

படிக்காதவன்: டப்பா பிலிம். படம் ஆரம்பித்தவுடனே கொட்டாவி வருகிறது. கிச்சு கிச்சு மூட்டினால்தான் நகைச்சுவை காட்சிகளில் சிரிப்பு வருகிறது. படம் முடிந்தவுடன் பெரு மூச்சு வருகிறது. அடிக்கடி தமனா வருவதால் சற்றே ஆறுதல் வருகிறது.

பூ: அத்திப்பூ, குறிஞ்சிப்பூ வரிசையில் சசியின் பூ (நூறாண்டுக்கு ஒரு முறை பூக்கின்ற பூவல்லவா... )

4 comments:

முரளிகண்ணன் said...

நச்சென்ற விமரிசனம்.

பூ கமெண்ட், நயன்,தமன்னா கமெண்ட் அருமை

ஜெஸிலா said...

ம.ச.ம.ப. பட விமர்சனம் 100% சரி.
மற்றவை இன்னும் பார்க்கவில்லை. உங்க விமர்சனம் பார்த்தாச்சுல அது போதும். பூ மட்டும் பார்க்க வேண்டும்.

ஜெஸிலா said...

ம.ச.ம.ப. பட விமர்சனம் 100% சரி.
மற்றவை இன்னும் பார்க்கவில்லை. உங்க விமர்சனம் பார்த்தாச்சுல அது போதும். பூ மட்டும் பார்க்க வேண்டும்.

Nilofer Anbarasu said...

@ முரளிகண்ணன் ...
வருகைக்கும் பாராட்டுக்கும் ரொம்ப நன்றி.

@ ஜெஸிலா..
//பூ மட்டும் பார்க்க வேண்டும்.//
கொஞ்சம் வித்தியாசமான படம், கண்டிப்பா பாருங்க.முதல் முறையாக மறுமொழியிட்டுள்ளீர்கள், ரொம்ப சந்தோசமா இருக்கு. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.