Tuesday, February 03, 2009

கலைஞரை அழைத்த பில் கேட்ஸ்

திருப்பதியில் சாமி தரிசனம் செய்வதற்காக e-ticket புக் பண்ண சென்னை தி.நகரில் உள்ள வெங்கடேஸ்வரா கோவிலுக்கு ஒரு முறை சென்றிருந்தேன். சாமி கும்பிட்டு, டிக்கெட்டும் புக் செய்துவிட்டு வெளியே வரும்போது, கோவிலுக்கு எதிரே இருந்த ஸ்கூலில் ஏதோ கண்காட்சி என்று போர்டு வைத்திருந்தார்கள். நமக்குத்தான் இந்த மாதிரி எக்ஸ்ஷிபிஷுன் எல்லாம் ரொம்ப பிடிக்குமே, நேரே அதை நோக்கி நடந்தேன், கோக்ககோலாவுக்கு எதிராக ஏதோ ஒரு அமைப்பு நடத்திக்கொண்டிருக்கும் Anti-cola campaign அது. சுதேசி தயாரிப்புக்களை ஆதரித்தும், பன்னாட்டு கம்பெனிகளின் தயாரிப்புக்களுக்கு எதிராகவும் விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும்படி பல விளம்பரங்கள் வைத்திருந்தனர்கள். அதில் கலைஞரை நையாண்டி செய்து வரையப்பட்டிருந்த ஒரு கார்ட்டூனும் கவிதையும் ரொம்பவே கவர்ந்தது. அதிகம் ரசித்த காரணத்தால் அப்படியே உலாபேசியில் படம் பிடித்தேன். அந்த போஸ்டரும் கவிதையும் கீழே .



அன்பு உடன்பிறப்பே,
தம்பி பில்கேட்ஸ் என் இல்லம் தேடி வந்து
அமெரிக்காவுக்கு வந்தே ஆகாவேண்டும் என்று எனக்கு
அன்புக்கட்டளையிட்டத்தை நீ அறிவாய். இந்த நாடே அறியும்.
அந்த அன்புத்தம்பி நேற்று என் கனவிலே வந்தான்
“கோலாவுக்கு உங்கள் நாட்டில் தடையாமே அண்ணா
இது என்ன கொடுமை!” என்று குமுறினான்.

“கலங்காதே தம்பி,
நாடி வந்த நட்புக்காக ஓடிவந்து
நஞ்சும் குடிப்பான் தமிழன்” என்றேன்

தம்பி கோலா என்பது இரண்டெழுத்து
அதை காக்கும் நம் கொள்கை என்பது மூன்றெழுத்து.
வரைந்தது யார், கலைஞர் நடையில் இதை எழுதியது யார், என்று தெரிந்துகொள்ள ஆர்வம் இருந்தாலும் குறிப்பு எதுவும் அருகில் வைக்கவில்லை. இதை எழுதிய எழுத்தாளருக்கும் வரைந்த ஓவியருக்கும் வாழ்த்துக்கள். எக்சலன்ட் கிரியேட்டிவிட்டி.

4 comments:

ராஜ நடராஜன் said...

எழுத்து குசும்பு? :)))

Anonymous said...

அன்னை சோனியாவின் அன்புக் கட்டளைக்கு அடி பணிந்து கலைஞர் அமெரிக்கா சென்று பில்கேட்டுக்கு உளறுவது எப்படி என விளக்குவார்.

Nilofer Anbarasu said...

@ ராஜ நடராஜன் ...
//எழுத்து குசும்பு?//
அதேதான் :)

அர டிக்கெட்டு ! said...

வரைந்த்து : ஓவியர் முகிலன்
அமைப்பு: மக்கள் கலை இலக்கிய கழகம்
தண்ணீர் தனியார்மயத்துக்கெதிரான ம.க.இ.கவினர் நடத்திய இயக்கத்தை ஒட்டி நடந்த பிரச்சாரம்
இது நடந்து 2005
தொடர்புடைய சுட்டி
http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=823:2008-04-23-18-47-30&catid=37:2005&Itemid=29

நன்றி