Sunday, February 08, 2009

தமிழீழம்

தினசரி நாளிதழ், பத்திரிக்கை, இணையதளம் முதல் துண்டறிக்கை வரை பிரதான பிரச்சனையாக அலசப்படுவது ஈழம். ஈழம் அல்லது ஈழம் சார்ந்த விசயமே எங்கும் எதிலும். கட்சி தலைவர்கள் விடும் அறிக்கைகள் எல்லாம் தங்கள் நிகழ்கால பதவியையும் எதிர்கால அரசியலையும் குறிவைத்தே இருக்கிறது. சாமானியன் கூட சற்றே உணர்ச்சிவசப்பட்ட நிலையில் ஏதோ ஒரு சாராருக்கு சாதகமாகவே கருத்தை வெளியிடுகிறான். யோசித்துபார்த்து முடிவெடுக்கும் திறனையே தமிழன் இழந்து ஊடகங்கள் திணிக்கும் செய்தியின் பிரதிபலிப்பாகவே மாறிவிட்டான். சீமானின் பேச்சை ஐந்து நிமிடம் கேட்டால் ஈழத்துக்கு ஆதரவாகவும், 'துக்ளக்' சோ பேச்சை பத்து நிமிடம் கேட்டால் ஈழத்திற்கு எதிராகவும் பேசுகிறான். இதற்க்கு இடையே கலைஞருடைய அறிக்கையை வேறு கேட்டு குழம்பிப்போகிறான். இத்தனையும் சராசரி தமிழனுள் சரமாரியாக திணித்து கண்ணிருந்தும் கண்ணாடி தேடும் மடையர்களாக மாற்றியிருக்கிறது இந்த ஊடகம். இந்த நிலையில் நடுநிலையாக இரு பக்கத்தையும் சீர்துக்கிப் பார்த்து எழுதிய கட்டுரை ஒன்று படித்தேன், உக்கிரம் அடைந்துள்ள இன்றைய ஈழப் பிரச்சனையில் தவறு எங்கே இருக்கிறது என்பது இந்த கட்டுரையை படித்தால் புரியும். நிச்சயம் ராஜபக்சேவிடம் இல்லை.

1 comment:

Anonymous said...

இவர்கள் எல்லோரையும் விட தவறு இந்த பாரா என்ற பான்பராக் வியாபாரி கட்டுக்கதைகளை நம்பும் உங்களைப் போன்றவர்களிடம் இருக்கிறது