Tuesday, February 10, 2009

ஆன்-லைன் மூவி தியேட்டர்

ஆரம்பத்தில் தியேட்டரில் படம் பார்த்தோம், பின்னர் DVDயில் படம் பார்த்தோம், பிறகு ஆன் லைனில் புக் செய்துவிட்டு e-ticket கொண்டுபோய் படம் பார்த்தோம், இப்போது டெக்னாலஜியின் அடுத்த கட்டம் Virtual Theater, அதாவது ஆன்-லைன் மூவி தியேட்டர். ஆன் லைனில் புக் செய்துவிட்டு ஆன் லைனிலேயே படம் பார்க்கலாம். முதன் முறையாக Onlycinema.com அறிமுகப்படுத்தியிருக்கிறது. மதியம் 12 மணியிலிருந்து இரவு 11 மணிவரை ஒரு மணிநேர இடைவெளியில் ஒரு நாளைக்கு மொத்தம் 12 காட்சிகள். நம்ம வசதிக்கேற்ப ஷோ டயமிங்தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். ஷோ டயமிங்ஐ லோக்கல் டைம்க்கு மாற்றவேண்டிய அவசியமில்லை, நீங்கள் login செய்வதை வைத்து அதுவே உங்கள் லோக்கல் டைம்முக்கு மாற்றி காட்டும். டிக்கெட் புக் செய்தவுடன் உங்கள் ஈமெயில் முகவரிக்கு ஒரு கண்பர்மேஷுன் மெயில் வரும் அதில் உங்கள் ஷோவுக்கான பாஸ்வோர்ட் இருக்கும். அமெரிக்காவில் உள்ளவர்களுக்கு இரவு 10 மணி ஷோவும், இந்தியாவில் உள்ளவர்களுக்கு காலை 11.30 ஷோவும், லண்டனில் இருப்பவர்களுக்கு காலை 2 மணி ஷோவும் ஒன்றே. இந்த ஷோவுக்கு இந்தியாவில் உள்ள நீங்களும் அமெரிக்காவில் உள்ள உங்கள் பிள்ளைகளும் லண்டனில் இருக்கும் பேரக்குழந்தைகளும் டிக்கெட் புக் செய்துவிட்டால், நீங்கள் எல்லோரும் ஒரே தியேட்டரில் படம் பார்க்கலாம். வெவ்வேறு இடத்திலிருந்து :)

டிக்கெட் வாங்குவதற்கு முன்பே படத்தின் சில காட்சிகள் டிரைலர் போல் ஓடுகிறது, அதை பார்த்துவிட்டு புக் செய்யலாம். டிரைலர் பார்த்தேன், எக்சலெண்ட் விஷுவல் DivX குவாலிட்டி. படத்தை டவுன்லோட் செய்ய முடியாது என்று போட்டிருக்கிறார்கள், ஆனால் மென்பொருள் உதவியுடன் டிரைலர்ஐ டவுன்லோட் செய்ய முயற்சித்துப் பார்த்தேன், அப்பழுக்கில்லாமல் நன்றாகவே டவுன்லோட் ஆகிறது. படத்தையும் டவுன்லோட் செய்ய முடியும் என்றே நம்புகிறேன்.

சில குறிப்புகள்:

நீங்கள் படம் பார்ப்பதற்கு கீழ்க்கண்ட மென்பொருள்களை உங்கள் கம்ப்யூட்டரில் நிறுவவேண்டும்.
1. Internet Explorer 6.0 or above, Firefox 1.5 or above, or Safari 2.0 or above
2. JavaScript and Cookies must also be enabled
3. Adobe Flash Player 9.0 or above
4. Microsoft Windows XP SP2, Microsoft Windows Vista, Macintosh OS X or Linux

சில முக்கிய குறிப்புகள்:
1. நம்ம ஊர் தியேட்டர்க்குள் தண்ணி அடிக்க அனுமதிக்கமாட்டார்கள், ஆனால் virtual theater
ல் நண்பர்களுடன் தண்ணி அடித்துக்கொண்டே படம் பார்க்கலாம்.
2. அபிமான நடிகனை திட்டும் வில்லன் மீது கோபப்பட்டு ஸ்க்ரீன்ஐ கிழிக்க வேண்டாம், மீறி கிழித்தால் பின்னர் புது மானிட்டர் வாங்கவேண்டிவரும் என்பதை நினைவில் கொள்க.
3. பாஸ்வோர்டை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டாம், மீறி பகிர்ந்துகொண்டால், உங்கள் காசில் நண்பர் குடும்பம் படம் பார்க்கும், நீங்கள் வெளியில் இருந்து யூ-டியுபில் மீண்டும் டிரைலர் பார்க்கவேண்டியதுதான்.
4. ஷோ ஆரம்பம் ஆகும் நேரம் எந்த முக்கிய VIP
யின் வருகைக்காகவும் மாற்றப்படமாட்டது. சரியாக டைம்முக்கு ஷோஆரம்பித்துவிடும். ஆகவே 10 நிமிடம் முன்பாகவே login செய்து காத்திருக்கவும்.
5. படம் பார்க்கும்போது படத்தை pause செய்ய இயலாது. Online streaming ,அப்படியே பார்க்கவேண்டியதுதான். வீட்டில் ப்ரொஜெக்டர் இருப்பின், கம்ப்யூட்டரில் இருந்து output
ஐ ப்ரொஜெக்டருக்கு கொடுத்து ஸ்க்ரீனிலே படம் பார்க்கலாம்.

தற்போது
வெண்ணிலா கபடி குழு ஓடிக்கொண்டிருக்கிறது. 10 டாலர் கொடுத்து ஒரு டிக்கெட் வாங்கிவிட்டால் வீட்டில் உள்ள அனைவரும் படம் பார்க்கலாம். இந்தவார வீக்கெண்டில், நீங்கள் எந்த ஷோவுக்கு புக் செய்யப்போகிறீர்கள் என்பதை முன்கூட்டியே தெரிவித்தால் நானும் அதே ஷோவுக்கு புக் செய்கிறேன், இருவரும் ஒரே தியேட்டரில் படம் பார்த்துவிட்டு மெசெஞ்சரில் சிலாகித்துகொள்வோம் :-)

6 comments:

கோவி.கண்ணன் said...

கணனியில் பார்ர்கும் படங்களில் டவுன் லோட் செய்ய முடியாத படம் வேற இருக்கா ?

ஒண்ணுமே முடியவில்லை என்றால் இருக்கவே இருக்கு டிஜிட்டல் கேமரா...படம் ஓட ஓட எடுத்துடலாம்

Cable Sankar said...

நல்ல பதிவு நிலோபர். நன்றி

Nilofer Anbarasu said...

@ கோவி.கண்ணன் & Cable Sankar ...
__/\__

ஆளவந்தான் said...

அதெல்லாம் சரி, தலைவி படத்த போட்டுட்டு அவர பத்தி ஒரு வார்த்த கூட இல்லியே.. ஏன்.. இல்லே ”ஏங்கு”றேன் :)

Nilofer Anbarasu said...

@ ஆளவந்தான் ...
//ஏன்.. இல்லே ”ஏங்கு”றேன் :) //
வாக்கியத்தில் உள்ள சிலேடையை ரொம்பவே ரசித்தேன்.

//அதெல்லாம் சரி, தலைவி படத்த போட்டுட்டு அவர பத்தி ஒரு வார்த்த கூட இல்லியே..//
இரண்டு காரணங்கள்..
1. பாய்ஸ் படத்துல விவேக் சொல்லுவாரே "பாம்பு செட்டு விளம்பரத்துக்கு எதுக்குங்க ரம்பான்னு", அதுமாதிரிதான் இதுவும்.
2. மென்சோகம் கொண்ட இந்த படம் பிடித்திருந்தது, சரி போடலாமே என்று இங்கு போட்டேன்.

Busy said...

Good, U dnt How to Download