Sunday, February 15, 2009

மடகாஸ்கர் | சுல்தான் தி வாரியர்

இது ஒரு அனிமேட்டட் மூவி, மருந்துக்கு கூட மனிதர்களின் வாசம் படத்தில் கிடையாது. நியூயார்கில் உள்ள சென்ட்ரல் பார்க் ஜூவில் படம் ஆரம்பிக்கும் முதல் காட்சியிலேயே எவ்வளவு நுணுக்கமாக அனிமேஷன் செய்திருக்கிறார்கள் என்பது புரிந்துவிடுகிறது. ஒரு ஐம்பத்து பேரை ஒரு காட்சியில் காண்பிக்கிறார்கள் என்றால், அனைவருடைய உடல் அசைவுகள், காற்றில் அசையும் அவர்களுடைய ஆடை வரை அனைத்தையும் துல்லியமாக அனிமேஷன் மூலம் சாத்தியப்படுதியிருக்கிறார்கள். படத்தில் Marty என்கி்ற வரிகுதிரையும் Alex என்கி்ற சிங்கமும் உங்கள் மனதை கொள்ளை கொள்வது உறுதி. Marty காட்டு வாழ்க்கை விரும்பி ஜூவில் இருந்து தப்பித்து செல்ல, அதனுடைய உற்ற நண்பனான Alex, Melman (ஓட்டகசிவுங்கி), மற்றும் Gloria (காண்டாமிருகம்) அதனை தேடி ஜூவில் இருந்து தப்பிக்கும். இந்த மூன்று மிருகமும் ரயில்வே ஸ்டேஷனில் Marty சந்திக்க, அங்கிருக்கும் மக்கள் எல்லாம் அலறியடித்துக்கொண்டு ஓடுவதும், இந்த மிருகங்களை போலீஸ் துப்பாக்கி முனையில் சுற்றி வளைப்பதும், பின்னனி இசையும் சேர்ந்து அணிமேட்டது படம் பார்க்கிறோம் என்கின்ற உணர்வையே மறக்கடிக்கிறது.

கேமராவில் காட்டை படம்பிடிப்பது எவ்வளவு சிரமமோ அதைவிட சிரமம் அனிமேஷனில் படம்பிடிப்பது. இந்த படத்தில் அனிமேஷன் மூலம் ஒரு அடர்ந்த காட்டையே உருவாக்கியிருக்கிறார்கள். செடி, கொடி, மரம், புல், பூச்சி என்று எதையும் விட்டுவைக்கவில்லை. சாப்பிட அசைவம் கிடைக்காமல் ரொம்ப கஷ்டப்படும் சிங்கம் ஒரு கட்டத்தில் உணர்வை அடக்கமுடியாமல் தன் நண்பனான வரிகுதிரையிம் மீதே பாய்வதும் பின்னர் வருந்தி தன்னைத்தானே சிறைவைத்துகொள்வதும் அருமையான செண்டிமெண்ட். கிளைமாக்ஸ் இல் படையெடுத்து வரும் நரிகளிடம் இருந்து தன் நண்பர்களை காப்பாற்ற சிங்கம் சண்டைபோடுவது காமெடி கலந்த action காட்சி.

குழந்தைகளுக்காக எடுக்கக்கூடிய இது போன்ற படங்கள் நம்மை போன்ற பெரியவர்களுக்கும் பிடித்திருப்பது இயக்குனருடைய திறமையாக இருந்தாலும், self evaluate செய்து பார்த்தல் மிகப்பெரிய மரங்களுக்கு கீழே முளைத்திருக்கும் மெல்லிய சின்ன சின்ன காளான்களை போல் நமக்குள் இன்னும் அந்த பிள்ளை மனசு துளிர்விட்டபடி இருப்பது புரியும்.

சுல்தான் தி வாரியர் - கிட்டதட்ட இரண்டு ஆண்டுகளாக தயாரிப்பில் உள்ள படம், பல கோடிகள் முதலிடு, ஒரு அனிமேட்டட் படத்திற்கு இவ்வளவு செலவு செய்கிறார்களே படம் ஓடுமா என்று அவ்வப்போது தோன்றும். Madagascar பார்த்தபின்பு, சற்றே அனலிஸ் செய்து படத்தை எடுத்து, நல்ல முறையில் மார்க்கெட்டிங் (குசேலன் போல் இல்லாமல்) செய்தால் நிச்சயம் வெற்றி பெரும் என்று தோன்றுகிறது. அனிமேட்டட் படம் என்பதால், இரண்டரை மணி நேரம், 5 பாடல், 4 சண்டை காட்சி போன்ற சராசரி ரஜினி பட பார்முலா இதற்கு பொருந்தாது. சற்றே அதிலிருந்து வெளியில் வந்து 1.45 மணி நேர படமாக, விறுவிறுப்பு குறையாமல் நிறைய presence of mindஉடன் கூடிய காமெடி கலந்து எடுத்தால் செஞ்சுரி அடிப்படுது உறுதி. மேலும் தமிழ் சினிமாவிற்கு ஒரு புது ரூட்ஐ காட்டிய பெருமையையும் தட்டிசெல்லலாம். நிறைய அனிமேஷன் படமும் வருவதற்கு வாய்ப்பு ஏற்ப்படும். ரஜினி என்ற பெயர் இருந்தால் போதும் படம் ஓடிவிடும் என்ற நினைப்புடன் படம் எடுதுக்கொண்டிருந்தால், தயாரிப்பாளர் அடிக்கடி குசேலனை நினைத்துக் கொள்வது நலம்.

6 comments:

வடுவூர் குமார் said...

மடகாஸ்கர்- அருமையிலும் அருமை.உணர்வுகள் & அசைவுகள் என்று பிரம்மாண்டப்படுத்தியிருக்கிறார்கள்.
இவ்வளவு நன்றாக அனிமேஷன்கள் இருக்கு என்பதை Ice Age படம் பார்த்துதான் தெரிந்துகொண்டேன்.

RAMASUBRAMANIA SHARMA said...

நல்ல பதிவு....அருமையான விமர்சனம்....இரண்டு படங்கள் பற்றி...

வருண் said...

குசேலன் ல என்ன பிரச்சினைனா, 60 கோடிக்கு அதை வாங்கிய ப்ரமிட் சாய்மிராவை சொல்லனும்! 60 கோடிக்கு அதை எப்படி வாங்கலாம்? இன்னும் புரியலை.

சுல்தான் தி வாரியர், தோல்வியை தழுவ வாய்ப்புகள் அதிகம். ஆனால் குழந்தைகளை (டிஸ்னி படம் போல), இது பெரு வெற்றியும் அடையலாம். பார்க்கலாம்

வருண் said...

குசேலன் ல என்ன பிரச்சினைனா, 60 கோடிக்கு அதை வாங்கிய ப்ரமிட் சாய்மிராவை சொல்லனும்! 60 கோடிக்கு அதை எப்படி வாங்கலாம்? இன்னும் புரியலை.

சுல்தான் தி வாரியர், தோல்வியை தழுவ வாய்ப்புகள் அதிகம். ஆனால் குழந்தைகளை (டிஸ்னி படம் போல), இது பெரு வெற்றியும் அடையலாம். பார்க்கலாம்

இலவசக்கொத்தனார் said...

மடகாஸ்கர்-2 வந்துட்டுப் போயாச்சு, இப்போ என்ன நிதானமா முதல் பாகத்துக்கு விமர்சனம்?

அப்புறம் க்ளோரியா காண்டாமிருகம் இல்லைங்க நீர்யானை! எகொஇச!!

Nilofer Anbarasu said...

@வடுவூர் குமார் ...
//இவ்வளவு நன்றாக அனிமேஷன்கள் இருக்கு என்பதை Ice Age படம் பார்த்துதான் தெரிந்துகொண்டேன்.//
Ice Age படம் இன்னும் பார்க்கவில்லை..... நேரம் கிடைக்கும் போது பார்க்கவேண்டும்.

@RAMASUBRAMANIA SHARMA ...
வருகைக்கும் ரசித்தமைக்கும் நன்றி...

@ வருண் ...
// சுல்தான் தி வாரியர், தோல்வியை தழுவ வாய்ப்புகள் அதிகம். ஆனால் குழந்தைகளை (டிஸ்னி படம் போல), இது பெரு வெற்றியும் அடையலாம். பார்க்கலாம்//
ஆமாம், பொறுத்திருந்து பார்க்கலாம்.

@ இலவசக்கொத்தனார் ...
//மடகாஸ்கர்-2 வந்துட்டுப் போயாச்சு, இப்போ என்ன நிதானமா முதல் பாகத்துக்கு விமர்சனம்? //
இப்பத்தாங்க நான் முதல் பாகம் பார்த்தேன்.

//அப்புறம் க்ளோரியா காண்டாமிருகம் இல்லைங்க நீர்யானை!//
ஒ! அப்படியா.... சுட்டி காட்டியதற்கு நன்றி.... மாத்திடுறேன். நீர்யானை நான் பார்த்ததில்லை, அனிமேஷன்ல் பார்த்தபோது அதன் உருவம் சரியாக பிடிபடவில்லை.

//எகொஇச!!//
அப்படினா?

வருகைதந்த அனைவருக்கும் __/\__ :)