Sunday, August 09, 2009

அய்யன் வள்ளுவரும் ஹீரோ ஹோண்டாவும்

ஹீரோ ஹோண்டா வண்டி வாங்கி மூன்று மாதங்கள் ஆகின்றது. இரண்டாவது ப்ரீ சர்வீசுக்காக நேற்று பெங்களூரில் இருக்கும் ஹீரோ ஹோண்டா சர்வீஸ் சென்டெரில் (Nikki motors) கொடுத்திருந்தேன். இன்றைக்கு டெலிவரி தருவதாக சொல்லியிருந்தார். விடும் போதே வாரநாட்களில் வேலைக்கு போக வண்டி தேவைப்படுவதாலும் நேரமின்மையாலும்தான் வீக்கெண்டில் கொண்டுவந்து விடுகிறேன், நாளை கண்டிப்பாய் கொடுத்துவிடும்படி மேலாளரிடம் சொல்லியிருந்தேன். இன்று வண்டியை எடுப்பதற்காக காலை 11 மணியளவில் சர்வீஸ் சென்டருக்கு சென்றால், சென்டர் பூட்டியிருந்தது. செக்யூரிட்டியிடம் கேட்டபோது, இன்று வள்ளுவர் சிலை திறப்பை ஒட்டி சில அமைப்புகள் ஸ்டிரைக் அறிவித்திருப்பதால் காலை திறந்தவுடன் மூடிவிட்டதாக பதிலளித்தார். மேனேஜர், supervisor என்று யாருடைய உலாபேசி என்னையும் தர மறுத்துவிட்டார். நேரம் ஆகா ஆகா டெலிவரி எடுக்க வந்த கஸ்டமர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிக் கொண்டே போனது. கிட்ட தட்ட 12 பேர் கூடிவிட்டோம். ஒரு நண்பரின் மூலமாக மேனேஜரின் நம்பர் கிடைத்து அவரை தொடர்புகொண்டேன். அவர் கன்னடத்தில் ஏதேதோ சொல்லிக்கொண்டே போக, எனக்கு கன்னடம் தெரியாத காரணத்தால் அவரை நிறுத்தி, ஆங்கிலத்தில் சொல்லுமாறு கேட்டேன். அரைகுறை ஆங்கிலத்தில் அவர் சொல்ல, நான் பதிலுக்கு, சர்வீஸ் செய்யாவிட்டாலும் பரவாயில்லை, நான் அடுத்த வாரம் கொண்டு வந்து மீண்டும் விடுகிறேன் தயவு செய்து இப்போது வண்டியை கொடுக்குமாறு சொன்னேன். இப்படியே இருவரும் பேசிக்கொண்டே போக,பேச்சு லேசாக வாக்குவாதமாகி ஒரு கட்டத்தில் செல்லை சுவிட்ச் ஆப் செய்து விட்டார். வள்ளுவர் சிலை திறப்பை மறந்துவிட்டு சர்வீசுக்கு கொடுத்து என் தவறு என்று நினைத்துக்கொண்டு, இனியும் காத்திருப்பதில் பயன்னில்லை என்று உணர்ந்து அங்கிருந்து கிளம்பிவிட்டேன். அப்படியே ஒரு பஸ் பிடித்து சில வேலைகளை முடித்துக்கொண்டு மாலை வீடு திரும்பினேன். நேற்று நல்லாத்தான் பேசுனான் இன்னைக்கு சண்டையாகிப் போச்சு என்று நடந்த விபரத்தை சொல்லிவிட்டு டி.விஐ போட்டேன்.
இந்த இரண்டும், இரண்டு சிலை திறப்பு விழாக்களை குறிப்பது அல்ல. இரு மாநில மக்களது இதயங்களை திறந்திருக்கிற சிறப்பு விழாக்கள் -- சிலையை திறந்து வைத்து கலைஞர் மனம் திறந்த பேச்சு
என்று தலைப்புச் செய்தியில் வாசித்தார்கள்.


KEYWORDS: திருவள்ளுவர், சர்வக்ஞர்.

2 comments:

Joe said...

நல்ல இடுகை.

உங்களது அனுபவத்தையும், கருணாநிதியின் பேச்சையும் அழகாக இணைத்துள்ளீர்கள் எள்ளலுடன்.

Nilofer Anbarasu said...

@ Joe ...
//நல்ல இடுகை. //
ரொம்ப நன்றி ஜோ.