Friday, October 02, 2009

டிராபிக் ஜாம்

இனிமே பீக் ஹவர்சில் வண்டி ஓட்டக்கூடாது என்று நேற்று வீட்டிற்குள் வரும்போது நினைத்துக்கொண்டேன். நம்ம ஊரில் உள்ள டிராபிக்குக்கு பயந்தே எப்போதும் பீக் ஹவர்சில் எங்கேயும் செல்வதில்லை. அப்படியிருந்தும் சில நேரங்களில் மாட்டிக்கொள்வதுண்டு. இன்று தீபாவளி டிரஸ் எடுப்பதற்காக பைக் எடுத்துக்கொண்டு கிளம்பினேன். காலை 12 மணிக்கு கிளம்பி மாலை 5 மணிக்கு முன்பு திரும்ப நினைத்திருந்தேன். ஆனால் திரும்பும்போது மழை பிடித்துக்கொண்டதால் ஒரு மணிநேரம் தாமதமானது. சரியாக 6 மணியளவில் மழை விட கிளம்பினேன், எதிர்பார்த்து போலவே டிராபிக்கும் அதிகமாகி நன்றாக மாட்டிக்கொண்டேன். வேகமாக சென்ற வாகனங்கள் எல்லாம் மெதுவாக செல்ல ஆரம்பித்து ஒரு கட்டத்தில் ஊர்ந்து செல்லவேண்டிய நிலைமை. வண்டியை நிறுத்தவும் முடியாது வேகமாக ஒட்டவும் வழியிருக்காது ஆனால் நகர்ந்துகொண்டே இருக்க வேண்டும். கொஞ்சம் கூட ரிலாக்ஸ் செய்ய முடியாத நேரம். இது போன்ற நேரங்களில் தான் எனக்கு எப்போதுமே ஷூவுக்குள் இருக்கும் உள்ளங்காலும் ஹெல்மெட்டுக்குள் இருக்கும் உச்சந்தலையும் அரிக்கும். எனக்கு மட்டுமல்ல என் வண்டிக்கும்தான், அதுவரை நன்றாக ஓடிய வண்டி இந்த மாதிரி நேரங்களில் ஆப் ஆகிவிடும். ஆப் ஆனவுடன், ஏதோ நான் தான் ஒட்டுமொத்த ரோட்டையும் பிளாக் செய்திருப்பதுபோல் என்னை நோக்கி பல ஹாரன்கள் பறந்தன. என்னைப்போல் என் வண்டி மட்டுமல்ல உலாபேசியும்தான். சும்மா நேரத்தில் கூப்பிடாதவன் எல்லாம் வரிசையாக ரவுண்டு கட்டி கூப்பிட்டு நலம் விசாரித்தார்கள். மொத்தத்தில் இருபது நிமிட பயணம் ஒன்னரை மணி நேர பயணமாக மாறி ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தேன். வீட்டினுள் வந்தவுடன் வழக்கம்போல் மீண்டும் நினைத்துக்கொண்டேன் "இனிமே பீக் ஹவர்சில் வண்டி ஓட்டக்கூடாது ".
Picture Courtsey: Funny Farm Boutique

No comments: