Photo Coutersy : Maalaimalar.com விஜயகாந்த. தமிழக பத்திரிக்கைகளில் நாள்தோறும் இடம்பெறும் மந்திரப்பெயர். மதுரையில் இருந்து சென்னைக்கு வந்து திரையுலகில் தனக்கென ஒரு தனிஇடம் பிடித்து அதிரடி Action heroவாக வலம் வந்தவர். வலம் வருபவா. தமிழகத்தை பொருத்தவரை திரையுலகுமும் அரசியலும் இரண்டர கலந்தவை. அரசியலில் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள, மக்களுக்கு கொள்கைகளை விளக்க, சினிமாவை ஒரு பிரச்சார பீரங்கியாக பயன்படுத்திய தலைவர்களை நாம் பார்த்திருக்கிறோம். அந்த வரிசையில் இன்று விஜயகாந்த். எப்படி M.G.R ஒரு நடிகராக அறிமுகமாகி, பின்னர் தி.மு.க வில் தன்னை இணைத்துக்கொண்டு இரண்டு முறை M.L.A பதவி வகித்து பின்னர் அக்கட்சியில் இருந்து பிரிந்து தனிக்கட்சி கொண்டு ஆட்சியையும் பிடித்து கடைசிவரை அசைக்க முடியாத சக்தியாக இருந்தாரோ, அப்படியே அதையே மீண்டும் நிகழ்த்திக்காட்ட நினைக்கிறார் விஜயகாந்த். விஜயகாந்தின் பலம்? முன்னாள் ரசிகர்கள், இந்நாள் தொண்டர்கள். ரசிகர்களை தொண்டர்களாக மாற்றி கட்சி ஆரம்பித்த இரண்டு வருடங்களுக்குள் ஒரு சட்டமன்ற தேர்தல், ஒரு இடைத்தேர்தல், ஒரு உள்ளாட்சி தேர்தல் என மூன்று தேர்தல்களை சந்தித்து, தமிழகத்தின் மூன்றாவது தனிப்பெறும் கட்சியாக உருவாக்கியுள்ளார் என்றால் இதற்கு காரணம் சரியான தலைமையும், கட்டுக்கோப்பான ரசிகர்களின் களப்பணியும் தான்.
தமிழக மக்கள் அவ்வப்போது இரண்டு பெரிய கட்சித்தலைவர்களை தவிர்த்து மூன்றவது தலைவரை தேடியிருக்கிறார்கள். ‘Basha’ திரைப்படம் வந்தபோது ரஜினியை அரசியல் தலைவராக பார்க்க அனைத்து மக்களுமே ஆசைப்பட்டனர். ஆனால் அந்த அறிய சந்தர்பத்தை அவர் கோட்டைவிட்டது பரிதபத்துக்குரியது. அதே போல் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ‘வைகோ’வை ஒரு மாற்று தலைவராக பர்த்தனர். கட்சிகள் மாறி மாறி கூட்டணி வைத்ததில் அவரது நம்பகத்தன்மையும் சந்தேகத்திற்குள்ளானது. இவர்கள் இருவரும் விட்ட இடத்தை மக்கள் விஜயகாந்திற்கு அளிக்க விரும்புகிறார்கள். அரசியலில் ஈடுபட அரசியல் தெரிந்து இருக்க வேண்டும் என்பது அவசியமல்ல. சமூக அக்கறை, நல்லெண்ணம், நிர்வாகத்திறமையுள்ள எவரும் அரசியலில் ஈடுபடலாம். இலவச திட்டங்களைக் காட்டிலும், வீட்டிற்கே ரே~ன் பொருள்களை கொண்டு வரும் திட்டம் சற்றே வித்தியாசமானது /உபயோகமானது.
ஒரு கட்சி ஆட்சிக்கு வந்தால் தான் நல்லது செய்யமுடியும் என்பது உண்மையல்ல, ஒரு நல்ல எதிர்கட்சி ஆளும் கட்சியைவிட பண்மடங்கு மக்களுக்கு நல்லது செய்ய முடியும். தே.மு.தி.கவை ஆளும்கட்சியாக மாற்றுகிறோமோ இல்லையோ முதலில் அதை ஒரு பலம் பொருந்திய எதிர்கட்சியாக்குவோம். தகுதி இருப்பின் பின்னர் அதுவே ஆளும் கட்சியாக மாறும்.

1 comment:
Happy birthday Captian.........
Post a Comment