Tuesday, May 06, 2008

நீயா? நானா? -- க்ளாசிக்கல் டாக் ஷோ

மெகா சீரியல்களில் சிக்கிக்கிடந்த மக்களை வெளியே கொண்டுவந்த பெருமை விஜய் டி.விக்கு உண்டு. சீரியல்களை குறைத்து டாக் ஷோக்களை அறிமுகப்படுத்தி இளைஞர்களின் கவனத்தை தன் பக்கம் இழுத்துக்கொண்டது. காப்பி வித் அணு, லொள்ளு சபா, காதலிக்க நேரமில்லை, மதுரை, கனா காணும் காலங்கள், மதன்ஸ் திரைப்பார்வை, ஜோடி No 1 என்று பல அருமையான ப்ரோக்ராம் இருந்தாலும் எனக்கு ரொம்ப பிடித்தது நீயா? நானா? தான். இந்த நிகழ்ச்சியின் பெருமையே, எந்த டி.வியும் இது வரை காப்பி அடிக்காததுதான். காப்பி அடிக்க முடியாததுதான்.

இந்தளவு ஹிட் ஆனதிற்கு காரணம் நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்களை மிகவும் கவனமாக தேர்ந்தெடுப்பதும் அதன் anchor கோபிநாத்தும் தான். ஒரு தலைப்பை எடுத்துக்கொண்டு, அதற்கு ஒரு அழகான விளக்கம் கொடுத்து, இருதரப்பையும் சுருக்கமாக அறிமுகப்படுத்திவிட்டு விவாதத்திற்குள் நுழைவதும், கண்ணா பின்னாவென்று பேசாமல், எடுத்துக்கொண்ட தலைப்பின் உட்பிரிவுகளை பற்றி நுணுக்கமாக பேசும்போது என்னையும் அறியாமல் ரசிக்க ஆரம்பித்துவிடுகிறேன். முடிவை சொல்லாமல் விடுவது பலருக்கு ஒரு குறையாகவே உள்ளது. முடிவை சொல்லுவதற்கு இது ஒன்றும் பட்டிமன்றம் அல்ல. இருதரப்பு கலந்துரையாடல்களை கேட்ட பின்பு நாமே ஒரு நிலைப்பாட்டை எடுதுக்கொள்ளவேண்டியதுதான். கோபிநாத்தும் வெறும் டாபிக் உடன் வராமல் கொஞ்சம் ஹோம் வொர்க் / ரிசர்ச் செய்திருக்கிறார் என்பது அவர் பேசுவதில் இருந்தே தெரிகிறது. ரொம்ப நல்லா பண்றிங்க கோபிநாத். எழுத்தாளர் சுஜாதாவை நீங்கள் பேட்டி எடுத்ததை பார்த்தேன், அதுவும் ரொம்ப நல்லா இருந்தது.


KEYWORDS: NEEYA NAANA GOPINATH, GOPINATH, NEEYA NAANA

5 comments:

SP.VR. SUBBIAH said...

////ரொம்ப நல்லா பண்றிங்க கோபிநாத்///

உண்மை. எனக்கும் பிடித்த நிகழ்ச்சி இதுதான்!

பதிவிற்கு நன்றி நண்பரே!

Nilofer Anbarasu said...

@sp.vr.subbiah
உற்சாகப்படுதியதற்கு (பின்னூட்டத்திற்கு) ரொம்ப தேங்க்ஸ் சார்.

வனம் said...

வணக்கம் இராஜா

எனக்கும் பிடித்த நிகழ்ச்சி இதுதான்

மேலும் இந் நிகழ்சியில் எடுத்துக்கொள்ளும் தலைப்புகளும் சமூக அக்கரையுடன் உள்ளது

Nilofer Anbarasu said...

@இராஜராஜன்
//இந் நிகழ்சியில் எடுத்துக்கொள்ளும் தலைப்புகளும் சமூக அக்கரையுடன் உள்ளது//
இந்த அளவு successசுக்கு அதுவும் ஒரு காரணம் தான்.

admin said...

I like Neeya Naana very much.. Very interesting & informative program.