வலையுலக நண்பர்கலுக்கு ப்ரியனின் கவிதைகள் எந்த அளவிற்கு அறிமுகம் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் எனக்கு நேற்றுத்தான் அறிமுகம். எதையோ இன்டர்நெட்டில் தேடும்போது தற்செயலாக அவருடைய வெப் சைட்ஐ பார்க்க நேர்ந்தது. படித்தவுடன் மனதில் பச்சக் என்று ஒட்டிக்கொண்ட இரண்டு கவிதைகள் கீழே.
தள்ளி நின்றே
கும்பிடு!
இறங்கிவந்து கட்டிக் கொடுக்கச் சொல்லி
அடம்பிடிக்கப் போகிறான்
அய்யனார்!
#
நான் ஒரு பக்கம்
உன் உடைந்த
கண்ணாடி வளையல் துண்டுகள்
ஒரு பக்கம்!
சமனாகி விடுகிறது
காதல் துலாபாரம்!
அவருடைய வலைத்தளத்திற்கு சென்றால் உங்களுக்கு டபுள் treat நிச்சயம். ஒன்று அவருடைய கவிதைகள் மற்றொன்று அந்த வலைத்தள டிசைன். website design சூப்பர்!.

7 comments:
Yes.. especially he once (long back) wrote a series (a love story), that was damn beautiful.
அய்யனாருக்கு கல்யாணம் ஆகிடுச்சுன்னு சொன்னாங்களேய்யா..
கவிதைகளும் , இணையதள வடிவமைப்பும் உங்களுக்கு பிடித்திருந்ததில் மிக்க மகிழ்ச்சி ராஜா.
என் பக்கத்தை உங்கள் வலைப்பூவில் அறிமுகப்படுத்தியமைக்கு நன்றிகள்.
உங்கள் வருகைக்கும் உங்கள் பின்னூட்டத்திற்கும் நன்றி ராஜா,
இது என் முதல் கவிதை தொகுப்பு
ப்ரியனின் கவிதைகளை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி
அவர் வலைப்பதிவிற்குச் சென்று வாசிக்கிறேன்
@யாத்திரீகன்...
//Yes.. especially he once (long back) wrote a series (a love story), that was damn beautiful.//
Thanks for the information and visit. Do u know the link?
@ப்ரியன்.....
உங்களுடைய இப் வலைப்பதிவையும் கூட படித்தேன். ரொம்ப நல்லா இருந்தது. யாத்திரீகன் சொல்லுற கதை உங்கள் வலைத்தளத்தில் இருக்கா? இருந்தால் லிங்க் தரவும்.
@மாதங்கி....
வருகைக்கு நன்றி மாதங்கி. அடுத்து என்ன புத்தகம் எழுதிக்கொண்டு இருக்கிறீர்கள்.
தமிழ் தெரிந்தவர்கள் நூலாசிரியராக வாய்ப்பு :
சங்க கால மக்களின் வாழ்க்கை முறையை விளக்கும் புற நானூறு நூல் போன்று இந்திய சுதந்திரத்திற்குப் பின் இந்தியரின் வாழ்க்கைமுறையை விளக்கும் நூல் ஒன்றினை கீதம் பப்ளிகேசன்ஸ் மூலம் தென்னிந்தியாவில் மிகப்பெரிய புத்தகக் கண்காட்சியான சென்னைப் புத்தகக் கண்காட்சியில் பிரபல சிறப்பு விருந்தினர் ஒருவரால் வெளியிட உள்ளோம். இந்த நூலில் ஆசிரியராக இணைய தமிழ் தெரிந்தவர்களுக்கு வாய்ப்பு
maore details in;
http://www.vahai.myewebsite.com/
Post a Comment