என்று சொன்னார். அனைவர் மனதிலும் உள்ள நியாயமான ஆதங்கம் தான்.......ஆனால் யாரை குறிப்பிட்டு குற்றம் சொல்ல முடியும்? இந்த நிலைமைக்கு காரணம் நாம்தான். நீங்களும் நானும்தான்.இந்த மாதிரியான கூட்டங்கள்ல நாம பேச வேண்டிய தலைப்புகளை கொஞ்சம் மாற்றி வைக்கணும். கடந்த 10 ஆண்டுகள்ல 125000 விவசாயிகள் தற்கொலை பண்ணியிருக்காங்க, மூணு வேலையும் டைனிங் டேபிள்ல எத வச்சு சாப்புடுரோமோ அவுங்க சாப்புடல, ஒரு மணி நேரத்துக்கு 2 பேரு 3 பேரு விவசாயிகள் இந்தியா பூர தற்கொலை பண்ணிக்கிட்டு இருக்காங்க, அத பத்தி இந்த நாட்டுல debate இல்ல, இந்த mediaயால headlinesல இல்ல. இதே சென்னைல 21ஆம் நூற்றாண்டுல நாம செல்போனையும் இண்டெர்நெட்டையும் பத்தி பேசிக்கிட்டு இருக்கும் போது, மலம் அள்ளக்கூடிய தமிழனை பார்த்துக்கிட்டு இருக்கோம். எத பார்த்து பெரும்மையா இருக்கும்? அத வேண்டாம்முன்னு ஒரு தீர்மானம் போட நம்மலால முடியலையா. இன்றைக்கு 6.5 கோடி மக்கள் நாம இருக்கோம், பிரான்ஸ்ல 6 கோடிதான் இருக்காங்க, இத்தாலில 6 கோடிதான் இருக்காங்க, நம்ம தேச வருமானத்த விட அவுங்க வருமானம் அதிகம், ஒரு சின்ன மாநிலத்த விட அவுங்க சின்னம், இன்றைக்கு அங்க இருக்க equality ஏன் இங்க இல்லாமபோச்சு, ஜாதிய கட்டிக்கிட்டு அலுவுறோம் education is commercialized, religion is politicalised, commerce is vulgarised, politics is criminalised, criminals are glorified, womens are commodified, childrens are laborised, society is standardise, iam shocked and surprised.
Thursday, July 17, 2008
நீங்களும் நானும்தான் பொறுப்பு
பிரபலங்களை வைத்து நடந்த ஒரு நீயா நானா நிகழ்ச்சியில் பேராசிரியர் அத்துவான் பேசியது
Subscribe to:
Post Comments (Atom)

1 comment:
இன்னும் 10 வருசத்துல சோறு திங்க அரிசி கிடைக்காம அலையறப்பத்தான் உழவனத் தேடுவொம். அதுவரைக்கும் உழவர்களை பத்தி நமக்கு என்ன கவலை. காச விட்டெறிஞ்சா அரிசி கடையில கிடைக்குதுனுத்தான் போவோம்.
வெறுத்துப்போன உழவர்கள் பல பேரு, போதும்டா சாமினு நிலத்த எல்லாம் பிளாட் போட்டு வித்துகிட்டு இருக்காங்க. இப்டியே விளை நிலம் எல்லாம் குறைஞ்சா, சம்பாதிக்கிற பணத்தையா சாப்பிட முடியும்? அரிசி வேணும்ல?
இப்பவே யோசிச்சா நல்லது.
Post a Comment