
நான்கு நாள் டெமாக்ரடிக் நேஷனல் கண்வென்ஷுன் டென்வரில் இன்று தொடங்கியுள்ளது. இந்த நான்கு நாள் மாநாட்டின் முடிவில் தான் ஒபாமா அதிகாரப்பூர்வமாக அமெரிக்கா அதிபர் தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்பட இருக்கிறார். கிட்டத்தட்ட ஐம்பத்து ஆயிரம் முக்கிய உறுப்பினர்கள் கலந்துகொள்கிறார்கள், பதினைந்து ஆயிரம் ரிப்போர்ட்டர்கள் நிகழ்ச்சியை கவர் செய்கிறார்கள்.

Extended stay hotel
களில் ஒரு நாளைக்கு 30$ ஆகா இருந்த வாடகை இந்த நான்கு நாள் மட்டும் ஒரு நாளைக்கு 260$ ஆகா உயர்த்தப்பட்டுள்ளது. Down town முழுவதும் எங்கு திரும்பினாலும் போலீஸ் தான். பாதுகாப்புகள் மிகவும் அதிகமாக இருக்கிறது, கார், வேன், ஜீப், பைக், சைக்கிள் என்று ஆயுதம் ஏந்திய போலீசார் சுற்றி வந்து கொண்டே இருக்கீறார்கள். எதோ இங்கிலீஷ் படம் பார்க்குற மாதிரி இருக்கு. நான் அறிவாலயம்

சென்றிருக்கிறேன். அறிவாலயத்தை சுற்றி என்ன என்ன பார்த்தேனோ அது எல்லாவற்றையும் இங்கும் பார்க்கமுடிந்தது. உதாரணமாக, அறிவாலயத்தில் கலைஞரின் படம், அவர் எழுதிய புத்தகம், அவரை பற்றிய புத்தகம், வாழ்க கோஷங்கள்,

தி.மு.க கொடி, கட்சி சார்ந்த பொருள்கள் விற்கும் குட்டி குட்டி கடைகள் என நான் அங்கே பார்த்ததை அனைத்தும் இங்கேயும் பார்க்க முடிந்தது. கலைஞருக்கு பதில் இங்கே ஒபாமா அவ்வளவுதான் வித்தியாசம். இங்கே எல்லா பக்கமும் ஒபாமா படம்தான். ஒபாமா படம் போட்ட டி ஷர்ட்கள், ஒபாமாவை பற்றிய புத்தகங்கள், நெஞ்கில்

குத்திக்கொள்ளும் batchகள் என சகலமும் உண்டு. நம்ம ஊரு கடற்கரையில் நடிகர்களுடைய படங்கள் அட்டையில் இருக்கும், 5ரூ கொடுத்தால் அதோடு நின்று படம் எடுத்துக்கொள்ளலாம். அதே போல் இங்கே ஒபாமாவின் அட்டைப்படம் இருக்கிறது, ஒரு டாலர் கொடுத்து அதோடு நின்று போட்டோ கூட எடுத்துக்கொள்ளலாம்.

இங்குள்ள மீடியாக்கள் கூட மெக்கெயினை விட அதிகம் ஒபாமாவையே கவர் செய்கின்றன, தேர்தல் பிரச்சாரம் நம் நாட்டை விட ரொம்பவும் டிசென்ட்டாக நடக்கிறது, தைரியமாக நிருபர்களை சந்திக்கிறார்கள், குறிப்பாக அவர்கள் கேட்கும் எல்லாவிதமான கேள்விகளுக்கும் நேரடியாக பொறுமையாக பதில் சொல்லுகிறார்கள். சில பேட்டிகள் தொடர்ந்து ஒன்னரைமணி நேரம் கூட போகின்றது. அமெரிக்கா அரசியல் பற்றி எனக்கு ரொம்ப தெரியாது ஆனால் பொதுவாக அரசியல் என்பது
Oscar Ameringer சொன்ன மாதிரி
"Politics is the gentle art of getting votes from the poor and campaign funds from the rich, by promising to protect each from the other. " என்பது தான் என்னுடைய கருத்து.
3 comments:
நன்றி!
திமிங்கிலத்த பத்தியோ, அவாள் பத்தியோ கவித யாராவது எழுதினாங்களா? அத சொல்லுங்க .. :-)
@ boston bala,
தமிழ்மணத்தில் இடுக்கையை புதுப்பிப்பதற்கு முன்பே உங்களுடைய கமெண்ட் கண்டு சற்றே ஆச்சர்யப்பட்டேன். நன்றி.
@ ram ravishankar,
உண்மையிலேயே உங்களுடைய கமெண்டை ரொம்பவும் ரசித்தேன். சூப்பர் கமெண்ட். இங்கே கவிதை எல்லாம் வேலைக்கு ஆகாது.....எல்லாமே பாலிசிதான்.
Post a Comment