தமிழ் சேனல்களை பொறுத்தவரை புது விதமான நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்துவதில் விஜய் டிவி எப்போதுமே நம்பர் ஒன். ஜோடி நம்பர் ஒன், காபி வித் அணு, நீயா நானா, பாடும் ஆபீஸ், கலக்கப் போவது யாரு
என்று பல நிகழ்ச்சிகளை இதற்க்கு உதாரணமாக சொல்லலாம். எத்தனையோ புதிய நிகழ்ச்சிகள் வந்திருந்தாலும் பல ஆண்டுகளுக்கு முன்னாள் ஒளிபரப்பான யூகி சேதுவின் நையாண்டி தர்பார் இன்றைக்கும் எனக்கு பிடித்த நிகழ்ச்சிகளில் ஒன்று. இது போன்ற நிகழ்ச்சிகளின் வெற்றியை நமக்கு அடையாளம் காட்டுவதே மற்ற டிவிக்களில் (காப்பியடிக்கப்பட்டு) வரும் இதே போன்ற நிகழ்ச்சிகள்தான். இந்த வரிசையில் இப்போது புதிதாக சேர்ந்திருப்பது கோடம்பாக்கம் ஸ்kool. மேடைகளில் மிம்மிக்கிரி செய்யும் கலைஞர்கள் அதிகம் பயன்படுத்திய கான்செப்ட் தான் கதை. ஒரு காலேஜ்ல ரஜினி, கமல், விஜயகாந்த் எல்லாம் படிக்கிறாங்க என்று பல குரல்களில் பேசிக்காட்டுவார்கள், இங்கு அதையே நாடகமாக ஆக்கியிருக்கிறார்கள். வகுப்பின் ஆசிரியராக சுவாமிநாதனும், மாணவர்களாக ராசுக்குட்டி, சின்ன கவுண்டர், மமீதா, ஆண்ட்ரியா, வீராசாமி, சவுண்டு மணி, பில்லா, Prestige பத்மநாபன் மற்றும் பலர். எல்லோருமே கலக்கலாக இமிடேட் செய்தாலும் ஹய்-லைட் பில்லாவாக நடித்திருக்கும் சிவகார்த்திகேயன் தான். அஜித் ஸ்டைலில் அவர் பேசுவதும் பின்னணி இசையில் பில்லா தீம் மியூசிக் வருவதும் பெர்பெக்ட் காமெடி. இந்த நிகழ்ச்சியின் வெற்றியே மொக்கை வசனங்கள்தான். சும்மா சொல்லக்கூடாது அந்தக்கால "Prestige"பத்மநாபனில் இருந்து இந்தகால மமிதா வரை அனைவரும் ஒரேமாதிரி மொக்கை போடுகிறார்கள். கூடிய சீக்கிரம் கோலிவூட் காலேஜ், ஜாலி கிளாஸ் என்ற பெயரில் மற்ற சேனல்களில் இது போன்ற நிகழ்ச்சிகள் வரும் என்று எதிர்பார்க்கிறேன்.
Tuesday, February 24, 2009
Subscribe to:
Post Comments (Atom)

2 comments:
but Mind Your Language English Series is the best.. இந்த கோடம்பாக்கம் ஸ்கூல் அவ்வளவு நல்லா இல்லை. சீக்கிரமே போர் ஆகிடுது
@ மை ஃபிரண்ட் ...
//but Mind Your Language English Series is the best..//
Mind Your Language என்று முதலில் வாசித்த போது ஏதோ தப்பா எழுதிட்டோமோன்னு பயந்துட்டேன். முழுசா அந்த வரியை வாசித்த பின்புதான் அது ஒரு தொடர்ன்னு புரிஞ்சுது :)
Post a Comment