குழந்தைகள் மிகவும் அழகானவர்கள். பெரியவர்களிடம் பார்க்க அரிதான அந்த
இன்னொசென்ஸ் தான் அவர்களுடைய ப்ளஸ் பாயிண்ட். மாதத்தின் முதல்
வாரத்தில் என் அப்பாவை போல் இருக்கும் என் பிள்ளை அதே மாதத்தின் கடைசி
வாரத்தில் என் அம்மாவை போல் இருக்கும். இந்த resemblence நமக்குள் ஒரு
வித பரவசத்தை ஏற்படுத்திக்கொண்டே இருக்கும். மூன்று வயதிலிருந்து ஆறு வயது
வரை அவர்களுடைய முக அழகு பெரும்பாலும் அவர்களுடைய பற்களை பொறுத்தே அமையும்.
பற்கள் வரிசையாக அரிசி போல் அமைந்துவிட்டால் ஓகே, எத்திக்கொண்டோ அல்லது வேறு என் பிள்ளைகள் பிறந்து சில நாட்களுக்கு அவர்களுக்கு கை சப்பும் பழக்கம் இல்லை. சில மாதங்கள் கழித்து சில பல காரணங்களுக்காக நாங்களே அவர்களுக்கு அதை சொல்லிக்கொடுத்தோம். அந்த சில பல காரணகளை இங்கே சொல்ல விரும்பாவிட்டாலும் ஒரு காரணம், concentration அதிகமாகும் என்பது. பிள்ளைகள் கை சப்பும் போது நன்றாக யோசிப்பார்களாம் அதனால் concentration அதிகமாகுமாம். இதற்காக ஆரம்பித்தாலும் பின்னர் அவர்கள் கத்தும் போது சமாதனப்படுத்த, சமாளிக்க இதுவே எங்களுக்கு ஒரு பெரிய வசதியாக மாறிப்போய்விட்டது. அவர்களுக்கு பல் முளைக்க ஆரம்பித்தவுடன் தான் இதை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்று தோன்றியது. அதற்கு காரணம் அப்போது கலந்துகொண்ட ஒரு கல்யாணத்தில் ஒரு சில பிள்ளைகள் ஆறு ஏழு வயதாகியும் இன்னும் அந்த பழக்கத்தை விட முடியாமல் கோர்ட்டு சூட்டு போட்டுக்கிட்டு கை சப்பிக்கிட்டு திரிந்தார்கள். இவர்களையும் விட்டால் நாளைக்கு இப்படிதான் திரிவார்கள் என்று நினைத்து இந்த பழக்கத்தை உடனே நிறுத்த முடிவு செய்தோம். நாங்கள் தான் நினைத்தோமே தவிர அவர்கள் நினைக்கவில்லை. சொல்லிக்கொடுத்தபோது உடனே கற்றுக்கொண்டவர்கள் அதை விட சொன்ன போது உடனே விடவில்லை.
என்ன செய்வதென்று இரண்டு நாள் யோசித்தோம், முதல் வேலையாக கையில் துணி கட்டுவது என்று முடிவானது. கட்டினோம், கட்டினோம், கட்டினோம் .... ஒரு நாளைக்கு இருபது முறை இரவு பகல் பாராமல் கட்டினோம். ஆனால் துணி கனமாக இருந்ததால் அவர்கள் அழகாக டோப்பா போல் அடிக்கடி கழட்டிவிட்டனர். இதை லேட் ஆகா புரிந்துகொண்ட நாங்கள், பின்னர் மெலிதான துணி ஒன்றை எடுத்து நன்றாக இறுக கட்டினோம். இந்த டெக்னிக் ஒரு அரை நாள் முதலில் வேலை செய்தது. ஆனால் அவர்களோ கட்டை விரல் மேல் பகுதியில் இருக்கும் அந்த மெலிதான துணியை முன் பற்களால் லேசாக கடித்து ஓட்டை போட்டு கட்டை விரலை மட்டும் வெளியே எடுத்து சப்ப ஆரம்பித்து விட்டார்கள். நாங்களும் துணியை வேறுபக்கம் மாற்றி மாற்றி கட்டினாலும் அவர்களுடைய ஓட்டை போடும் பெர்பாமென்ஸ் வேகமாக அதிகரித்தது. எங்களால் ஈடு கொடுக்கமுடியவில்லை. இரண்டே நாளில் துணி சல்லடை போல் ஆகி வண்டி துடைக்கக்கூட பயன்படுத்த முடியாத நிலைக்கு போய்விட்டது. சில வாரங்கள் அப்படியே விட்டுவிட்டோம். எதையும் சரியா பிளான் பண்ணாம பண்ணுனா இப்படிதான் என்று நினைத்து, அடுத்ததாக கையில் கட்டிய துணிக்கு மேலே ஒரு காலுறையை ( Socks ) மாட்டி கட்டிவிட்டோம். அவர்களால் அதை கழட்டவும் முடியவில்லை கடித்து ஓட்டை போடவும் முடியவில்லை. ஒரு நாள் முழுவதும் அப்படியே சுற்றினார்கள். சக்சஸ், சக்சஸ் என்று சொல்லியபடியே அன்று இரவு தூங்க போனோம். இரவு இரண்டு மணி இருக்கும், இருவரும் தூக்கத்திலேயே அழ ஆரம்பித்தர்ர்கள். தூக்கம் புரியாமலும், கை சப்ப முடியாததாலும் பயங்கரமாக கத்த ஆரம்பித்து விட்டார்கள். எவ்வளவோ முயன்றும் தூங்க வைக்க முடியவில்லை. எங்களுக்கோ பயங்கர டயர்டு, வேறு வழியின்றி கையில் கட்டியிருந்த துணி மற்றும் Socksஐ கழட்டிவிடோம். கையை வாயில் வைத்துக்கொண்டு உடனே தூங்கிப்போனார்கள். நாங்களும் தூங்கிப்போனோம். காலையில் எழுந்து பார்த்தேன், "நீ என்ன அவ்ளோ பெரிய அப்பா டக்கரானு" சொல்லுற மாதிரி என்முன்னே இருவரும் வாயில் கை வைத்தபடி இருந்தனர்.
ஒருநாள் தீடீர் என்று வேப்பெண்ணெய் தடவலாம் என்று முடிவு செய்து உடனே வாங்கி வந்தேன். தடவினோம், எதிர்பார்த்தபடி வாயில் வைத்து விட்டு கத்தினார்கள். ஒர்க்அவுட் ஆனதாக நினைத்தோம். அடுத்தடுத்து சில நாட்களில், தடவியவுடனேயே என்னுடைய லுங்கியிலோ அல்லது மனைவியின் நைட்டியிலோ உடனே துடைக்க ஆரம்பித்தார்கள். இப்படியோருநாள் நாங்கள் தடவ அவர்கள் துடைக்க முயற்சிக்க நடந்த சண்டையில் என்னை பாட்டில் கீழே விழுந்து உடைந்துவிட்டது. மீண்டும் back to square என்ற நிலை.
என்ன செய்வதென்று தெரியாமலேயே சில
மாதங்கள் ஓடின, திண்டுக்கல் சாகர் மெடிக்கலுக்கு ஒரு முறை சென்ற போது, thumb suckingக்கு ஏதாவது மருந்து இருக்கிறதா என்று கேட்டேன். Femite என்று ஒரு மருந்தை காட்டினார்கள். 10 ml 145
ரூபாய். அதிக விலை என்று தோன்றியதால் அப்போது வாங்காமல் வந்துவிட்டாலும்
பின்னர் வேறு வழியின்றி பெங்களூர் வந்த பிறகு தேடி பிடித்து வாங்கினேன்.
மருந்தின் மேல் பெரிய நம்பிக்கை இல்லாமல் தான் தடவினேன். மருந்தின்
மிகப்பெரிய ப்ளஸ் பாயிண்ட் தடவியவுடன் துணியில் எல்லாம் துடைக்க முடியாது.
நன்றாக கழுவினால் மட்டுமே போகும். சும்மா சொல்லக்கூடாது கசப்பு என்றால்
அப்படியொரு கசப்பு. தடவும் போது தெரியாமல் என் வாயில் கொஞ்சம்
தெரித்துவிட்டது, கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கு கசப்பு போகவில்லை. இந்த மருந்தை கண்டாலே இப்போது எல்லாம் ஓடுகிறார்கள்.
தற்போது வாயில் விரல் வைப்பதே இல்லை. இத்தனை முயற்சிக்கு பிறகு இந்த கை சப்பும் பழக்கத்தை மறந்துவிட்டார்கள் என்று சொல்வதை காட்டிலும் எங்களுக்காக விட்டு(கொடுத்து)விட்டார்கள் என்றுதான் சொல்லவேண்டும் காரணம் இந்த மருந்து பாட்டில் இன்னும் உடையவில்லை.
KEYWORDS: Femite, Thumb Sucking.
KEYWORDS: Femite, Thumb Sucking.


No comments:
Post a Comment