எந்த விழாவாக இருந்தாலும் புத்தகத்தை கிப்ட் ஆகா கொடுபதையே அதிகம் விரும்புபவன் நான். முன்பெல்லாம் யாருக்காவது பரிசு கொடுக்க வேண்டுமென்றால் மிகவும் யோசிக்க வேண்டும். அவர்களுக்கு பிடித்தமான ஒரு புத்தகத்தை தேர்ந்தெடுக்க ரொம்பவே மெனகெட வேண்டும். ஆனால் இப்போது, அலமாரியை பார்த்துவிட்டு உடனே nhmல் ஆர்டர் செய்து விடுகிறேன். அற்புதமான பேக்கிங்கில் வீடு வந்து சேருகிறது. அணைத்து புத்தகங்களை எனக்கு அறிமுகம் செய்வதினாலும், வாங்குவதை சுலபமாக்கியதாலும் எனக்கு இந்த அலமாரி ரொம்பவும் பிடித்திருக்கிறது.
உபயோகமாகவும் இருக்கிறது. சில நேரங்களில் ஆர்டர் செய்யும் போது , ஆழம் இதழ் இலவசமாக கிடைப்பதில் ஒரு உபரி சந்தோசமும் இருக்கிறது. கிழக்கு பதிப்பகத்தின் இந்த முயற்சி ஒரு Win - Win approachக்கு நல்ல உதாரணம். புத்தகத்தை பற்றி தெரிந்துகொள்வதில் எனக்கு மகிழ்ச்சியே அதே போல் வாங்குவதால் அவர்களுக்கும் மகிழ்ச்சியே. தொடர்ந்து வெளிவர வாழ்த்துக்கள்.
இந்த விமர்சனத்தை போல் நான் சேகரிக்க நினைத்த சில வற்றை கீழே கொடுத்துள்ளேன்.
1. பாக்யா இதழில் யாத்ரிகன் எழுதிய தொடர்.
2. விகடன் வரவேற்பறையில் வந்த வலைபூவின் தொகுப்பு.
3. Bangalore Mirror நாளிதழில் வெள்ளி தோறும் வரும் நல்ல உணவகங்களை பற்றிய விமர்சனம்.
4. புதிய தலைமுறை தொலைகாட்சியில் வெளிவரும் ஆயுதம் செய்வோம் தொடர் (வீடியோ )
5. Face book இல் சாப்பாட்டு கடை குழுமத்தில் உள்ள நல்ல உணவகங்களின் முகவரிகள்.

பல காரணங்களினால் இவற்றை முறையாக செய்ய முடியவில்லை. இருந்தாலும் செய்து கொண்டுதான் இருக்கிறேன்.
வீட்டில் உள்ளவர்களின் பாஷையில் சொல்லவேண்டுமென்றால் குப்பையை சேர்த்துக்கொண்டு தான் இருக்கிறேன்.

No comments:
Post a Comment