
சென்ற வாரம் ஒரு திருமணத்திற்காக என்னுடைய ஊருக்கு சென்றிருந்தேன். அங்கே பார்த்த ஒரு அலமாரி என்னை வியப்பில் ஆழ்த்தியது. கிட்டத்தட்ட 5 அடி நீளம், 4 அடி அகலம், 8 அடி உயரம் இருக்கும். மரத்தினால் செய்யப்பட்ட ஒரு போலீஸ் பீட் மாதிரி இருந்தது. இன்றைக்கு நகரத்தில் இருக்கும் ஒரு பட்ஜெட் அப்பார்ட்மெண்டின் பால்கனி சைஸ் என்று வைத்துக்கொள்ளுங்களேன். இது என்ன அலமாரியா என்றேன்? இதற்கு பெயர் மெத்தை தலகாணி அலமாரி என்றனர். அந்த காலத்தில் மெத்தை தலகாணி வைப்பதற்கென்றே இது போன்ற அலமாரிகள் ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்குமாம். இவற்றை எல்லாம் இன்றைக்கு இருக்கும் வீடுகளில் வைக்க வேண்டுமானால் இதற்கென தனியாக ஒரு அறை கட்டவேண்டும். காலப்போக்கில் மியூசியத்தில் தான் வைக்கவேண்டுமென நினைக்கிறேன்.


1 comment:
Post a Comment