பெண்கள் எப்போதுமே அழகானவர்கள், ஆண்களிடம் இல்லாத ஒரு மென்மை, நளினம் அவர்களிடம் உண்டு. ரயில்வே ஸ்டேஷனிலும், பஸ்
ஸ்டாண்டிலும் கொளுத்தும் வெயிலில் அரக்க பறக்க ஓடிக்கொண்டிருக்கும் போது, முன் பின் அறிமுகமில்லாத ஒரு அழகிய பெண் நம்மை கடந்து சென்றால் நம்மையும் அறியாமல் கண்கள் அவள் பக்கம் திரும்புவதும், பேருந்தில் ஜன்னலோர சீட் பிடித்து உட்கார்ந்த பிறகும் நம் நினைவை விட்டு விலகாமல் சற்று நேரம் இங்கேயும் அங்கேயுமாக ஓடியாடுவார்கள். குறிப்பாக பதின்ம வயதுடைய பசங்களுக்கு தினசரி வாழ்க்கையில் இது ஒரு அங்கமாகவே இருந்திருக்கும். அழகு, கவர்ச்சி, ஆபாசம், இந்த மூன்றுக்கும் என்னைக்கும் தண்ணிருக்குமானளவு வித்தியாசமிருந்தும் நடிகைகளுக்கு மட்டும் இது பாலில் கலந்த தண்ணிராக எப்போதும் பிரிக்கவே தெரியாது. கவர்ச்சியாக நடிப்பதில் தவறில்லை ஆனால், ஆபாசமாக நடிக்கமாட்டேன் என்று காலம் காலமாக சொல்லி வருகிறார்கள்.
கவர்ச்சியை மட்டுமே இளைஞர்கள் விரும்புகிறார்கள் என்றொரு மாயை இவர்களிடம் உள்ளது. உன்மையில் அரைகுறை ஆடை, கவர்ச்சி இரண்டையும் விட மென்சோகத்தில் உள்ள பெண்களை சிலர் அதிகம் விரும்புவார்கள். பல பெண்கள் மென்சோகத்தில் ரொம்பவே அழகாக இருப்பார்கள். அதிலும் இது போன்ற தருணத்தில் அவர்களிடம் குடிகொள்ளும் அமைதி, முகத்திற்கு மேலும் சற்று வசிகரத்தை அதிகப்படுத்தும். எவ்வளவோ அழகானவர்களிடம் இல்லாத ஒரு வசீகரம் இந்த மென்சோகம் கொண்டவர்களிடம் நான் உணர்திருக்கிறேன். குறிப்பாக ஜானி படத்தில் ஸ்ரீதேவியும், பார்த்திபன் கனவு படத்தில் ஸ்ரீகாந்தின் மனைவியாக வரும் சினேகாவும், குஷி, மொழி போன்ற பல படங்களில் ஜோதிகாவும் இந்த மென்சோகத்தை ரொம்பவே அருமையாக வெளிப்படுத்தியிருப்பார்கள். ஆண்கள் கூட மென்சோகத்தில் ரொம்பவே நிதானமாக ஆண்மையுடன் தேஜஸ்
ஆகா காணப்படுவதுண்டு. பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் சரத்குமாரும், இதயம் படத்தில் முரளியும் இதற்கோர் உதாரணம். பதிவர்களில் காயத்திரியின் எழுத்துக்களில் இதை உணரலாம். இவர் பதிவுகளில் ஒவ்வொரு வரியிலும் இந்த தாக்கத்தை அழகாய் வெளிப்படுத்தியிருப்பார். சற்றே தள்ளி நின்று யோசித்துப் பார்த்தால், இறுதியில் ஒரு கேள்விதான் எழுகிறது. சோகத்தை அழகாக பார்ப்பது என்னுடைய தவறா அல்லது மற்றவர்கள் அதை பர்ர்க்க தவறுகிறார்களா என்பது தான் புரியவில்லை.

No comments:
Post a Comment